உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.40,000 லஞ்சம் சர்வேயர் கைது

ரூ.40,000 லஞ்சம் சர்வேயர் கைது

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு சிறக்கல்படியை சேர்ந்தவர்கள், ஆனைமூளி பகுதியில் 10 சென்ட் நில வகை மாற்றம் தொடர்பாக, மண்ணார்க்காடு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தனர். இதற்கு, சர்வேயர் ராமதாஸ், 38, நில உரிமையாளரிடம், 40,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். நில உரிமையாளர்கள், லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தனர்.அதிகாரிகளின் அறிவுரைப்படி, நேற்று மதியம், 12:30 மணிக்கு சிறக்கல்படி பகுதியில் வைத்து பணத்தை பெற்ற சர்வேயர் ராமதாசை, டி.எஸ்.பி., தேவதாசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர், கையும், களவுமாக கைது செய்தனர்.திருச்சூர் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமதாஸ், சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ