உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனைவி நடத்தையில் சந்தேகம் கொன்ற கணவரும் தற்கொலை

மனைவி நடத்தையில் சந்தேகம் கொன்ற கணவரும் தற்கொலை

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையைச் சேர்ந்தவர் பிரபாகரன் பீம்சிங், 45, விவசாயி மற்றும் பன்றி வளர்ப்பு தொழில் செய்பவர். இவரது மனைவி ஆஷா, 37. இருவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. ரியான் பிரபாகரன் என்ற மகன் உள்ளார். மனைவியின் நடத்தையில் பிரபாகரன் பீம்சிங் சந்தேகமடைந்தார். இதனால், மனைவி செல்லும் இடங்களுக்கு அவருக்கு தெரியாமல் பிரபாகரன் பீம்சிங் பின் தொடர்ந்து சென்றார். இதை மனைவி அறிந்ததால், இருவரிடையே தகராறு ஏற்பட்டது.கணவன், மனைவி இடையே நேற்று முன்தினம் இரவில் ஏற்பட்ட தகராறில், வீட்டில் இருந்த அரிவாளால் ஆஷாவின் கழுத்தை அறுத்து பிரபாகரன் பீம்சிங் கொலை செய்தார். தொடர்ந்து, நேற்று அதிகாலை காரில் தோட்டத்துக்கு சென்று வீடு திரும்பிய பிரபாகரன் பீம்சிங், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து, மனைவியின் உடல் அருகே படுத்து தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த சாத்தான்குளம் டி.எஸ்.பி., கென்னடி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரித்தனர். பிரபாகரன் பீம்சிங் வீடு முன் நின்ற காரை போலீசார் சோதனையிட்டனர். அதில், குளிர்பான பாட்டில்களும், பூச்சிக்கொல்லி டப்பா மற்றும் கொலை செய்ய பயன்படுத்திய அரிவாளும் இருந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ