உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக காங்., தலைவர் குண்டாசில் கைதானவர்

தமிழக காங்., தலைவர் குண்டாசில் கைதானவர்

சென்னை : 'செல்வப்பெருந்தகை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின் வாங்க போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கம் எனக்கில்லை' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, காந்தி வழி வந்த தன்னை, நான் அவமானப்படுத்தி விட்டதாக, மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார்.ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. கொலை முயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி கலவரம் செய்த வழக்கு, வெடிபொருட்கள் வழக்கு, கொலை வழக்கு என, பல வழக்குகள் போன்றவை சமூகத்தின் மோசமான குற்ற வழக்குகள் தான். இப்படிப்பட்ட வழக்குகள் அவர் மீது உண்டு. குறிப்பாக, அவர் மீது மூன்று கொலை மிரட்டல் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இது தவிர, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு. குண்டர் சட்டத்தில் வழக்கில் கைதானதை இல்லை என்கிறாரா; இவரை வாழும் மகாத்மா என்று அழைக்க விரும்புகிறாரா? அரசியல் லாபங்களுக்காகவும், தன் மீதுள்ள வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தன் கொள்கைக்கு நேர் எதிர்க்கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால், செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா?செல்வப்பெருந்தகை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின் வாங்க போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. அவர், எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயார்.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Dharmavaan
ஜூலை 10, 2024 19:25

காங்கிரஸின் கேவலமான நிலை இந்த பாத்து கட்சி மாறிய பச்சோந்தி தலைவர் பதவி. ராகுல்கானின் திருட்டு குடும்பம் சுடலை துதி பாடுபவனை நியமித்தது


Prof T R Sankara Narayanan
ஜூலை 10, 2024 19:23

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா


Vijay D Ratnam
ஜூலை 10, 2024 16:32

இதெல்லாம் தகுதிங்க. இப்படிப்பட்டவிங்கதான் கட்சிக்கு தலைவரா இருக்க தகுதியானவர். தமிழ்நாட்ல அரசியல் செய்ய இவருதான் தகுதியானவர் என்று தெரியாமலா அந்த கட்சி செல்வப்பெருந்தகையை தலைவரா போட்டிருப்பாய்ங்க. இப்படிப்பட்ட ஒருத்தரை போடாம தமிழருவி மணியன் மாதிரி நேர்மை தூய்மை, உண்மைன்னு பினாத்துற ஆளையா போடுவாய்ங்க. இனி வரும் காலத்தில் செல்வப்பெருந்தகை என்று ஒரு உத்தமர் தலைவராக இருந்தார் என்று சொல்லும் அளவுக்கு தலைவர்கள் வருவார்கள். பழகிக்குங்க.


T.sthivinayagam
ஜூலை 10, 2024 15:41

அதிமேதாவிகள் என்ன எழுதி படிக்க சொல்வதை அப்படியே செய்பவர் அண்ணாமலை சார் என்று மக்கள் கூறுகின்றனர்


Shekar
ஜூலை 10, 2024 20:08

துண்டு சீட்டு கையில் இல்லையே.


R Kay
ஜூலை 10, 2024 14:06

டாஸ்மாக் குன்றியத்தில் வேட்பாளரின் குறைந்த பட்ச தகுதியே அவர் மீது ஐந்து அல்லது பத்து வழக்குகளாவது இருக்க வேண்டும். வழக்கு போட்டவர்களை மிரட்டியோ, மீண்டும் ஆட்சிக்கு வந்தோ, கட்சி தாவியோ வழக்குகளிலிருந்து பின்னர் விடுபடலாம்.


MANIMARAN R
ஜூலை 10, 2024 12:08

குண்டர்கள் அணைத்து கட்சிகளிலும் உள்ளனர்


Velan
ஜூலை 10, 2024 11:45

முடிந்தால் குண்டாசுக்கு அவருக்க முயற்ன்று பாக்கலாம் வெட்டி பேச்சு வீண் அறிக்கை இப்படி செய்தா தாமரை வளரும் ஆட்சிய புடிக்கும் கனவுல செய்பாடு மாற்ற படனும்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 10, 2024 09:50

இவ்வளவு பெருமை மிகு வழக்குகள் இருந்தும் கட்சிக்கு சொந்தக் கால் மட்டும், சாரி, காலில் நகம் கூட வளரவில்லையே.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூலை 10, 2024 09:28

தம்பி செல்வம் தானே வந்து சிங்கத்திடம் சிக்கிக் கொண்டாயே. இனி உன்னை யாராலும் காப்பாற்ற முடியாது. திருட்டுப்பயல் உனக்கே இவ்வளவு கோபம் வந்தால் நல்லவர்வளுக்கு எவ்வளவு கோபம் வரும்.


கனோஜ் ஆங்ரே
ஜூலை 10, 2024 16:51

போன மாசத்துக்கு முன்மாசம்... கோவைல வாக்காளர்கள் அடிச்சு விரட்டுனாங்க...?


malanguyasin
ஜூலை 10, 2024 08:55

காங்கிரஸ் தலைவர் சில சட்ட பிரச்சினை சம்பந்தமாக பேட்டி அளித்துள்ளாரே அதற்கு பதில் சொல்லுங்கள் இல்லை என்றால் நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு தொடருங்கள்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை