உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமநாதபுரம் மீனவர்களை மீட்க அழுத்தம் தராத தமிழக அரசு

ராமநாதபுரம் மீனவர்களை மீட்க அழுத்தம் தராத தமிழக அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம் : இலங்கை சிறையில் வாடும் ராமநாதபுரம் மீனவர்களை மீட்க, தமிழக அரசு மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தரவில்லை என தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.ராமநாதபுரம்மாவட்டம் பாம்பனிலிருந்து சென்ற 3 நாட்டுப்படகுகள், திருவாடானை தாலுகா நம்புதாளையிலிருந்து சென்ற ஒரு நாட்டுப்படகு என 4 நாட்டுப்படகுகளில் இருந்த 25 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் ஜூலை 1ல் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இம்மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு தமிழக அரசு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னதம்பி குற்றம்சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:விசைப்படகுகளில் பயன்படுத்தும் வலைகளால் மீன் வளங்கள் பாதிப்பதாக தெரிவித்தனர். நாட்டுப்படகு மீனவர்கள் பயன்படுத்தும் வலையால் எந்த தீங்கும் இல்லை என தெரிந்தும் கடந்த காலங்களில் இலங்கை கடற்படையினர் நாட்டுப்படகு மீனவர்களை கைது செய்தாலும் உடனடியாக விடுவித்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு உரிய அழுத்தத்தினை மத்திய அரசுக்கு கொடுக்கவில்லை. மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுகின்றனர்.தொடர் போராட்டங்களை மீனவர்கள் தரப்பில் நடத்தினாலும் உரிய நடவடிக்கை இல்லை. இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களின் காவலை நீட்டித்துள்ளது வருத்தமளிக்கிறது. ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினரை பார்க்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

N Sasikumar Yadhav
ஜூலை 08, 2024 15:33

40/40 கொடுத்தார்களே அனுபவிக்கட்டும்


S. Narayanan
ஜூலை 08, 2024 12:51

இந்த மீனவர்கள் திமுக வுக்கு ஓட்டு போடவில்லை போலும்


தமிழ்வேள்
ஜூலை 08, 2024 10:50

போதை மருந்து , தடை செய்யப்பட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தல் ,கடற்படையினரை கொலை செய்தல் போன்றவற்றை செய்யும் மீனவர் என்ற போர்வையில் உள்ள தேசவிரோத திருட்டு கும்பலுக்கு அழுத்தம் கொடுத்தால் , மாட்டிக்கொள்வது திமுக அரசு மட்டுமே .. சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ள அவர்களுக்கு பைத்தியமா ? கிறுக்கு பயல்கள் , வாங்கிய காசுக்கு ஏதேனும் ரிஸ்க் வந்தால் அவர்கள்தான் அனுபவிக்கவேண்டும் இவர்கள் மீன்பிடிப்பதோடு நிறுத்திக்கொள்ளவேண்டும் .....


ஆரூர் ரங்
ஜூலை 08, 2024 10:32

எனக்கென்னவோ திமுக தூண்டுதலின் பேரில்தான் எல்லை தாண்டுகிறார்கள் எனத் தோணுது. இப்போ மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரரைக் கொன்ற வழக்கும் இருக்கிறது. இனியும் மீனவர்கள் திமுக வின் பின்னால் சென்றால் மரணதண்டனையில் கூட முடியலாம்.


திகநாயக, கொழும்பு
ஜூலை 08, 2024 08:39

ஒன்றிய அரசு அழுத்தம் குடுக்கப் போனா, 3000, 4000 கோடி கடன் குடுங்கன்னு கேட்டு வாங்கிடறாங்க.


துஷார்சிங்
ஜூலை 08, 2024 08:36

மத்திய அரசு என்னத்துக்கு இருக்கு? இலங்கைக்கு கடன் குடுக்கவும்,அங்கே இருப்பவர்களுக்கு வீடு கட்டித்தரவும், அண்ணாமலையை அங்கே அனுப்புவதற்கும் தானா?


Davamani Arumuga Gounder
ஜூலை 08, 2024 14:32

அணுகுண்உ வீச்சுக்கு இணையான போர் ரஷ்யா- உக்ரைன் இடையில் நடந்து கொண்டிருந்த நேரத்தில் உக்ரைன் நாட்டில் படித்துக்கொண்டிருந்து மாணவர்களை .. தங்களின் வீர,தீர செயல்களை பயன்படுத்தி மீட்டு பத்திரமாக தமிழகத்திற்கு கொண்டுவந்து சேர்த்த .. தன்னிகரில்லா தமிழக - திராவிட மாடல் அரசுக்கு இந்த இலங்கை எல்லாம் அற்பமான ஜூஜூபி தானே? .. அப்படி இருக்கும் பொழுது மத்திய அரசை ஏன் கெஞ்ச வேண்டும்? .. தினவெடுக்கும் தோள்களுடன் இங்கு உலாவரும் திராவிடப்புலிகளை அனுப்பி, இலங்கை படையினருடன் போர் தொடுத்து, நமது மீனவர்களை மீட்டு வருவார் நம் விடியல் மாடல் அரசின் தலைவர் அஞ்சற்க மீனவர்களே அஞ்சற்க


Velan Iyengaar
ஜூலை 08, 2024 08:14

ஒன்றியம் அழுத்தம் தந்தால் தான் வேலை செய்யுமா ?? ஒன்றியம் வேலை செய்யாது.. செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்ட அளவுக்கு நன்றி .


அரசு
ஜூலை 08, 2024 08:06

ஏன் மாநில அரசை குறை சொல்கிறீர்கள்? இதுல்லாம் ஒன்றிய அரசின் வேலை. எதற்காக வெளியுறவு அமைச்சர் இருக்கிறார். ஜாலியாக வெளி நாட்டு பயணம் மேற் கொள்ளவா?


INDIAN
ஜூலை 08, 2024 07:23

இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று பேசினால் அதை புரிந்து கொள்ள முடிகிறது , ஆனால் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்றால் அப்படி ஒரு மத்திய அரசு எதற்கு , ராமேஸ்வரம் மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா? ஏன் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்


Sivakumar
ஜூலை 08, 2024 07:01

தேசபக்தி படுகிற பாட்டை.. மாநில அரசு ஒன்றிய அரசுகிட்ட போயி கெஞ்சி கூத்தாடணுமாம். அப்போ அவிங்க காங்கிரஸ் கூட எதுக்கு கூட்டணி அப்படி இப்படினு வேத உபதேசம் செய்வாங்கியளாம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை