வெளிநாடு ஹோட்டல்களில் வேலை பார்ப்போரில் தமிழர்களே அதிகம்
சென்னை:''வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல்களில் வேலை செய்பவர்களில் தமிழர்கள் தான் அதிகம் உள்ளனர்,'' என, உலகத் தமிழர் பொருளாதார நிறுவன தலைவர் சம்பத் கூறினார்.அவர் அளித்த பேட்டி:மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில், 11வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, வரும் 15, 16, 17ம் தேதிகளில் நடக்கிறது. மாநாட்டை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைக்கிறார். கடந்த, 50 ஆண்டுகளாக தமிழ் சமூகத்திற்கு பாடுபட்டு வரும், அமெரிக்காவில் உள்ள தமிழ்நாடு பவுண்டேஷன் நிறுவனத்திற்கு சிறப்பு விருது வழங்க உள்ளோம்.ஆந்திரா மற்றும் கேரள மக்கள் சுய தொழில்களில் அதிகம் ஈடுபடுகிற நிலையில், மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள ஹோட்டல்களில், வேலை செய்பவர்களில் தமிழர்கள் தான் அதிகம் இருக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.