உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தெரு விளக்கு மின் இணைப்புக்கு கட்டணம் நிர்ணயம்

தெரு விளக்கு மின் இணைப்புக்கு கட்டணம் நிர்ணயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளை உள்ளடக்கிய உள்ளாட்சி அமைப்புகள், தெரு விளக்குகளை பராமரிக்கின்றன. அவற்றுக்கான மின் வினியோகத்தை, மின் வாரியம் மேற்கொள்கிறது.புதிதாக ஒரு தெரு விளக்கு அமைக்கும் போது, அதற்கு மின் இணைப்பு வழங்க மின் வாரியம், 22,150 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. இந்த கட்டணம் ஆண்டுதோறும், 5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. அதேசமயம், பல இடங்களில் தெரு விளக்கிற்கு மின் இணைப்பு வழங்க, நிர்ணயித்துள்ள தொகையை விட செலவு குறைவாக உள்ளது. எனவே, தெரு விளக்கு மின் இணைப்பிற்கான கட்டணத்தை குறைக்குமாறு, மின் வாரியத்தை உள்ளாட்சி அமைப்புகள் வலிறுயுத்தியுள்ளன.இதையடுத்து, தெரு விளக்கிற்கு மின் இணைப்பு வழங்கும் போது, அதற்காக உண்மையில் செலவிடப்பட்ட தொகை அல்லது ஏற்கனவே நிர்ணயித்துள்ள கட்டணம் ஆகியவற்றில் எது குறைவோ, அந்த தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு நிலவரப்படி உள்ளாட்சி அமைப்புகள், 28 லட்சம் தெரு விளக்குகளை பராமரித்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை