உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரச்னைக்கு காரணமான கண்டக்டர் - போலீஸ் கட்டிப்பிடித்து அன்பு காட்டி அரசு நடத்திய "ஷோ"

பிரச்னைக்கு காரணமான கண்டக்டர் - போலீஸ் கட்டிப்பிடித்து அன்பு காட்டி அரசு நடத்திய "ஷோ"

சென்னை: நாங்குநேரியில் அரசு பஸ்சில் போலீஸ் டிக்கெட் எடுப்பதில், ஏற்பட்ட தகராறு காரணமாக, இரு துறைகளுக்கு இடையே மோதல் உண்டானது. இன்று (மே 25) அரசு துறை செயலாளர்கள் சந்திப்புக்கு பின், சம்பந்தப்பட்ட கண்டக்டரும், போலீஸ்காரரும் ஆரத்தழுவி சமதானம் ஆகினர். பிரச்னைக்கு காரணமான கண்டக்டர் மற்றும் போலீசை சமாதானம் செய்ய வைத்து அரசு ஷோ நடத்தி உள்ளது என சமூகவலைதளங்களில் விவாதம் கிளம்பி உள்ளது.திருநெல்வேலி - துாத்துக்குடி அரசு பஸ்சில் சீருடையுடன் போலீஸ்காரர் ஆறுமுகபாண்டி பயணித்தார். பணி நிமித்தமாக செல்வதால் கட்டணம் எடுக்க முடியாது என அவர் கூற, 'வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்' என கண்டக்டர் கூற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6r9t98hc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின், ஆறுமுகபாண்டி கட்டணம் செலுத்தி பயணித்தார். இது குறித்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்த செய்தி தினமும் நாளிதழ்களிலும், டிவிக்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியது.பிரச்னைக்கு முடிவு காண உள்துறை செயலாளர் அமுதாவை, போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி சந்தித்து இன்று (மே 25) ஆலோசனை நடத்தினார். இதில் பிரச்னைக்கு தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட கண்டக்டரும், போலீஸ்காரரும் ஆரத்தழுவி சமதானம் ஆகினர். இரு துறைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் போக்கு முடிவுக்கு வந்தது. சம்பந்தப்பட்ட கண்டக்டரும், போலீஸ்காரரும் ஆரத்தழுவி சமதானம் ஆகிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. பிரச்னைக்கு காரணமான கண்டக்டர் மற்றும் போலீசை சமாதானம் செய்ய வைத்து அரசு ஷோ நடத்தி உள்ளது என சமூகவலைதளங்களில் விவாதம் கிளம்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

Arivarasupandian T
மே 28, 2024 08:53

இதே போல் குற்றம் செய்த ஒவ்வொருவரும் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டு காவலர்களை கட்டிப்பிடித்தால் குற்றம் சரியாகிவிடுமா? தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாமா?


G.Krishnan
மே 27, 2024 18:27

யாருமே சட்டப்படி நடந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்பது போல் ஆகிறது . . . . .போலீஸ்காரர் பணம் கொடுத்து பயணம் செய்து, அது அலுவலக பயணமென்றால் செய்த செலவுகளை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து திரும்ப பெற்றுக்கொள்ளவேண்டியதுதானே. . . . . . அல்லது வாரண்ட் பெற்றுக்கொண்டு கடனமில்லாமல் முறைப்படி பயணம் செய்யவேண்டியதுதானே . . . . . . அதைவிட்டுவிட்டு நானும் சட்ட நடைமுறைகளை பின்பற்றமாட்டேன் யாரும் எதுவும் கேட்கக்கூடாது . . . . . . . . . . .ஓட்டுநர்களும் சாலை விதிகளை மதிக்க வேண்டிய அவசியமில்லை . . . . .நல்ல எடுத்துக்காட்டு . . . . . .சட்டங்கள் என்பதே கேலிக்கூத்தாகிவிட்டது . . . . . பேருந்தில் பயணம் செய்ய கட்டணம் கேட்டால் . . . . . . . . . நான் பஸ் ஓட்டுநர் தவறு செய்யும்போது அபராதம் போடுவேன் . . . . . . . . . நீயும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் . . . நாங்களும் எப்படி வேண்டுமானாலும் இருப்போம் . . . . . . . யாரும் கேட்பதற்கு நாதி இல்லை . . . . . . நாடு விளங்கிடும் . . . . . .நல்ல நிர்வாகம் சபாஷ்


Nesan
மே 27, 2024 09:12

எல்லாம் மகா நடிப்பு. மனிதர்காலே புரிந்து கொள்ளுங்கள்


Ravi Varadarajan
மே 27, 2024 07:59

நல்ல கூத்து


Arachi
மே 27, 2024 03:38

பிரச்சினை என்பது மனிதவாழ்வின் ஒரு அம்சமாகும். இதை தீர்ப்பது மனிதன் கையில் இருக்கிறது. நடத்துனர் அரசு வாகனத்தில் பணியாற்றும் நடத்துனர். அவருக்கு அவர் வாகனம் ஆபிஸ்.. போலீஸ்காரர் டிக்கட் எடுக்க வேண்டும் என்று நடத்துனர் கூறினால் டிக்கெட் எடுக்க வேண்டும். எடுத்துவிட்டு நடத்துனர் மீது கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கலாம்.


RAMAKRISHNAN NATESAN
மே 26, 2024 22:11

நகைச்சுவை மன்னரின் தர்பாரில் மற்றுமொரு காமெடி ஷோ ....


Barakat Ali
மே 26, 2024 21:54

புலிகேசி மன்னர் தீர்த்தார் பிரச்னையை ....


Mahendran Puru
மே 26, 2024 21:37

கோமாளித்தனத்தின் உச்சம் இந்த கட்டிப்பிடி நாடகம்.


rasaa
மே 28, 2024 12:02

. மன்னன் எப்படியோ, மக்களும் அப்படி. சரி. காவலர்கள் இலவச பயணம் செய்யலாமா? கூடாதா? சட்டம் என்ன சொல்கின்றது?


Kumaravel Om medical (Pharmacist)
மே 26, 2024 14:13

எனக்கு வருத்தம் பா,


Sivaswamy Somasundaram
மே 26, 2024 12:42

சிங்கம் 1 படம் விவேக் காமடி நினைவுக்கு வருது


மேலும் செய்திகள்