உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முழுதும் கணினி மயமாகிறது நுகர்பொருள் வாணிப கழகம்

முழுதும் கணினி மயமாகிறது நுகர்பொருள் வாணிப கழகம்

சென்னை:முறைகேடுகளை தடுக்க கிடங்குகளில் உள்ள அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் கையிருப்பு, விவசாயிகளிடம் வாங்கப்படும் நெல், ரேஷன் பொருட்களை எடுத்து செல்லும் லாரிகளின் இயக்கம் கண்காணிப்பு என, தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தின் அனைத்து பணிகளும் முழுதுமாக கணினிமயமாக்கப்பட உள்ளன. முழு கணினிமயமாக்கும் திட்டத்தை செயல்படுத்த, பல முறை முடிவு செய்தும், நடைமுறைக்கு வரவில்லை. தற்போது, அத்திட்ட பணிகளை ஒருங்கிணைக்கும் நிறுவனத்தை தேர்வு செய்ய, வாணிப கழகம், 'டெண்டர்' கோரியுள்ளது. திட்டச் செலவு 36 கோடி ரூபாய். டெண்டரில் தேர்வாகும் நிறுவனம், கணினிமய மென்பொருள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பு பணிகளை உருவாக்கி, ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை