உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிரிவல மலையில் கட்டுமானங்கள் ஆய்வு செய்ய குழு அமைத்தது ஐகோர்ட்

கிரிவல மலையில் கட்டுமானங்கள் ஆய்வு செய்ய குழு அமைத்தது ஐகோர்ட்

சென்னை : திருவண்ணாமலை கிரிவல மலையில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்த சென்னை உயர் நீதிமன்றம், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mwdajxn7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு:

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேசுவரர் கோவிலுக்கு, மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கிரிவல மலை 2,668 அடி உயரம் கொண்டது. இந்த புனித மலையின் அடியில் அமைந்துள்ள கோவிலின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது.சட்ட விரோதமாக கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, எந்த அனுமதியும் இன்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு, மின், குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. புனிதமான கிரிவல பாதையில் மரங்கள் வெட்டப்பட்டு, கழிப்பறைகள், கழிவுநீர் தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த சட்டவிரோத செயல்களுக்கு, வனத்துறை, நகராட்சி மற்றும் மின் துறை அதிகாரிகள் பொறுப்பாவர்.சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், மலைப்பகுதி 'லே அவுட்' ஆக மாறிவிடும் அபாயம் உள்ளது. மலைப் பகுதியில் கட்டப்பட்ட சட்ட விரோத கட்டடங்களை அப்புறப்படுத்துவதுடன், அவற்றுக்கான குடிநீர், மின் இணைப்புகளை துண்டிக்கும்படி, மார்ச் 29ல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். இதுவரை, எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்ற, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'திருவண்ணாமலை மலையே சிவன் தான். அங்கு எப்படி கழிப்பறை, கழிவுநீர் தொட்டிகள் கட்ட அனுமதிக்கலாம்?' என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்து, கிரிவல மலையில் சட்ட விரோத கட்டுமானங்களை ஆய்வு செய்து, இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வரும் 30க்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்புசாமி
ஜூலை 17, 2024 09:51

குழுவில் இருப்பவர்கள் நேர்மையாய் நடக்கணுமே கோவாலு. அவிங்களும்.திராவிடர்கள் தானே.


Godyes
ஜூலை 17, 2024 02:12

இந்து கோயில்களில் இந்த அநியாயம் நடக்கும்.இதை செய்பவர்களே அதை வணங்கும் இந்துக்கள் தாம் சர்ச் மசூதி அருகில் இப்படி கட்டுவதாக தெரிய வில்லை.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ