உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மன்னிப்பு விவகாரம் விஸ்வரூபம்: லண்டனில் இருந்து மன்னிப்பு கேட்டார் அண்ணாமலை

மன்னிப்பு விவகாரம் விஸ்வரூபம்: லண்டனில் இருந்து மன்னிப்பு கேட்டார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கோரிய வீடியோவை வெளியிட்டதற்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரினார்.கோவையில் நடந்த கூட்டத்தில், ஜி.எஸ்.டி., வரி வித்தியாசம் தொடர்பாக கிண்டல் தொனியில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் புகார் தெரிவித்தார். அது வைரல் ஆன நிலையில், மன்னிப்பு கேட்டார்.அவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 'வணிகர்களுக்கு மிஞ்சியது அவமானம் மட்டுமே' என காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால் அரசியல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் லண்டனில் இருக்கும் பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'நிதியமைச்சர் நிர்மலா உடன் அன்னபூர்ணா நிறுவனர் பேசிய வீடியோ வெளியானதற்கு மன்னிப்பு கோருகிறேன். வீடியோ வெளியிட்டதற்காக ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனிடம் வருத்தம் தெரிவித்தேன்.அன்னபூர்ணா சீனிவாசன் தமிழகத்தின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை, இத்துடன் முடித்து வைக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 50 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 20, 2024 08:11

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.


Paramasivam Ravindran
செப் 14, 2024 17:21

அண்ணாமலை என்ன சொல்ல வருகிறார். மன்னிப்பு கேட்டது சரி. ஆனால் அதை பிஜேபி வெளியிட்டது தப்பு.


venugopal s
செப் 13, 2024 23:49

இதனால் தான் தமிழக மக்கள் பாஜகவை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து உள்ளனர்!


Velan Iyengaar
செப் 13, 2024 20:50

கேடி ராகவனை கவுத்து விட்ட மாதிரி நிர்மலாவையும் கவுத்து உட்டுட்டார் ஒரே ஜமாய் தான் இப்படி தான் தலைமை இருக்கனும் ....


Sivakumar
செப் 13, 2024 21:52

கே டி ராகவன் மட்டுமா சார் ? நைனார் நாகேந்திரன் நல்ல மனுஷன் சார். பிஜேபி யில் எனக்கு பிடித்த ஒருசில நல்லவர்களில் இவரும் ஒருவர். அவரப்போயி மாட்டிவிட்டு ரொம்பவே தப்பு சார். நல்ல பிஜேபி காரங்க கூட ரொம்ப simplea கடந்து போயிட்டாங்க.


Velan Iyengaar
செப் 13, 2024 20:48

நாம காட்டியும் கொடுப்போம் .. கூட்டியும் கொடுப்போம் ஹா ஹா ஹா ...


rama adhavan
செப் 14, 2024 07:28

இவரது உண்மை முகத்தை கொண்டு வர வேண்டும். இது என் கோரிக்கை.


Barakat Ali
செப் 13, 2024 19:38

தமிழக பாஜகவில் அதிமுக பாஜகவும் இருக்கு ...... திமுக பாஜகவும் இருக்கு ...... ஏன், காங்கிரஸ் பாஜகவும் இருக்கு ....... கட்சி வளர்ந்தா துரோகிகளும் உருவாவதைத் தடுக்க முடியாது ....... சுருக்கமா சொன்னா கழகங்களிடம் பாஜக சோரம் போயிருக்கு ... ஒரு அண்ணாமலையால் அதை மீட்க முடியாது ..... மீண்டும் ஐ பி எஸ் பதவியை ஏற்க முடிந்தால் அவர் அதைச்செய்வது அவருடைய எதிர்காலத்துக்கு நல்லது .....


Sathyanarayanan Sathyasekaren
செப் 13, 2024 19:00

இது திருட்டு திராவிடியல்களின் மடை மாற்றும் வேலை, நிர்மலா மேடம் அவர்கள் மத்திய அரசு கொடுத்த நிதிகளுக்கு கணக்கு கேட்டதற்கு இந்த திருடர்களிடம் பதில் இல்லை அதை திசை திருப்ப ஒரு உப்பு சப்பு இல்லாத விஷயத்த மீடியாக்கள் மூலம் திசை திருப்புகிறார்கள். அது புரியாமல், பிஜெபி உணர்ச்சிவசப்பட்டு போகிறார்கள். இதற்கு பதிலடியாக நிர்மலாமேடம் கேட்ட கேள்விகளை ட்ரெண்ட் ஆக்கவேண்டும்.


Raj Kamal
செப் 20, 2024 12:31

ஆக்க வேண்டியது தானே, யார் தடுத்தார்கள்?


Sivakumar
செப் 13, 2024 18:53

இந்த விவகாரத்தை சுமுகமாக கடந்து செல்லவேண்டுமாம். அனால் திருக்காட்டுப்பள்ளி சம்பவத்தை டெல்லி ABVP தலைவியை வரவழைத்து ஊத்தி பெருசு பண்ணணுமாம். நல்ல நியாயம் சார்


Indian
செப் 13, 2024 18:32

விளங்கும்


RIfay
செப் 13, 2024 18:07

மனிதனை கேவலபடுத்துவதும் மிரட்டுவது இவர் கட்சி காரர்களின் வாடிக்கை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை