உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே பிரச்னை; இரு வேறு புகார்கள்: சிக்கிய விஜயபாஸ்கர் சிறையில் அடைப்பு

ஒரே பிரச்னை; இரு வேறு புகார்கள்: சிக்கிய விஜயபாஸ்கர் சிறையில் அடைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரூர்: நிலம் அபகரிப்பு புகாரில், கைது செய்யப் பட்ட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ், 50; தொழில் அதிபர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nf32wtf0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவரது மகள் ஷோபனா பெயரில், கரூர் அருகே குன்னம்பட்டி, தோரணகல்பட்டியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை, போலியான ஆவணங்கள் வாயிலாக யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், செல்வராஜ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் ஆகியோர் கிரையம் செய்து கொண்டதாக, கரூர், மேலக் கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர், கடந்த ஜூன், 9ல் கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். தற்போது இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.இது ஒரு புறம் இருக்க, தொழில் அதிபர் பிரகாஷும், வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த ஜூன் 22ல் புகார் அளித்தார். அதில், அதே தோரணகல்பட்டியில் இருக்கும், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் மற்றும் ஆதரவாளர்கள், போலி ஆவணங்கள் வாயிலாக, பத்திரப்பதிவு செய்து அபகரித்து கொண்டதோடு, இதைக் கேட்டதும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில், வாங்கல் போலீசார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்ளிட்ட பலர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட, ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கும் வழக்கு மற்றும் வாங்கல் போலீசார் பதிந்துள்ள வழக்கு ஆகியவற்றில் முன் ஜாமின் கேட்டு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில், கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, கடந்த 6ல் தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில், கேரள மாநிலம் திருச்சூரில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோரை, சார் பதிவாளர் கொடுத்த புகாரின் அடிப்படையிலான வழக்கில், நேற்று முன்தினம் காலை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து, கரூருக்கு அழைத்து வந்து, கரூர் ஜே.எம்.,-1 நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன், ஆஜர்படுத்தினர்.அப்போது, 'நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயர், முதல் தகவல் அறிக்கையில் இல்லை. பதிவு செய்யப்பட்ட நிலமும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரில் இல்லை. அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என, வக்கீல்கள் வாதாடினர்; அரசு தரப்பு வக்கீல்கள் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பரத்குமார், விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோரை வரும் 31 வரை நீதிமன்ற காவலில், சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையிலும், பிரவீன் குளித்தலை கிளை சிறையிலும், நேற்று காலை அடைக்கப்பட்டனர். கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட புகாரில் வாங்கல் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கிலும், விஜயபாஸ்கர் விரைவில் கைது செய்யப்படுவார் என, போலீசார் கூறுகின்றனர்.

'மாஜி'க்கு உதவிய இன்ஸ்பெக்டர் கைது

இதே நில அபகரிப்பு விவகாரத்தில், சென்னை வில்லிவாக்கம் காவல் நிலைய, சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருந்த பிரித்விராஜ் உடந்தையாக இருந்தார் என, குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்தும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து அவரை கைது ெசய்தனர்.சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:பிரித்விராஜ், இன்ஸ்பெக்டராக கரூர் டவுன் காவல் நிலையத்தில் பணிபுரிந்துள்ளார். அப்போது தான், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, வழக்கறிஞர் ஒருவர் வாயிலாக, போலி ஆவணங்கள் தயாரிக்க உதவி செய்துள்ளார். 'நில அபகரிப்பு செய்யப்பட்ட இடத்திற்கான ஆவணங்கள் தொலைந்து போய் விட்டன. அதை கண்டுபிடித்து தர வேண்டும்' என, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பினரால், கரூர் டவுன் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பிரித்விராஜ், மனுவை முறைப்படி விசாரிக்காமல், 'ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை' என, சான்றிதழ் வழங்கி, நில அபகரிப்புக்கு உதவி செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

22 ஏக்கர் நிலத்தின் மதிப்புரூ.100 கோடியா?

கரூரில் இருந்து, 15 கிலோ மீட்டர் துாரத்தில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குன்னம்பட்டி, தோரணகல்பட்டி பகுதிகள் அடுத்தடுத்து உள்ளன. ஆனால், அந்த பகுதியில் உள்ள, 22 ஏக்கர் நிலம், 100 கோடி ரூபாய் மதிப்பு என, மீடியாக்களில் தகவல் பரவுகிறது. ஆனால், 22 ஏக்கர் நிலம், தற்போதைய சந்தை நிலவரப்படி, 10 முதல் 12 கோடி ரூபாய் மட்டுமே விலை போகும் என, பத்திரப்பதிவு அலுவலக ஊழியர்கள் கூறுகின்றனர்.

மேலும் ஒரு வழக்கு

விஜயபாஸ்கர் மீது பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நாளை (ஜூலை 19) அல்லது நாளை மறுநாள் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

RAAJ68
ஜூலை 18, 2024 12:12

ஜெயலலிதாவின் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அளித்த ரிப்போர்ட் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். அதை ஏன் கிடப்பில் போட்டுள்ளது ஸ்டாலின் அரசு. சம்பந்தப்பட்டவர்களை ஜெயிலில் அடைப்போம் என்று ஆட்சிக்கு வருவதற்கு முன் போட்ட சபதம் என்ன ஆயிற்று.


RAAJ68
ஜூலை 18, 2024 12:10

பத்தாயிரம் கோடிகளை சுருட்டி உள்ளான் இந்த ஆளு... இதே மாதிரி நடவடிக்கை உங்கள் தொகுப்பு ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்க வேண்டும். குட்கா ஊழல் விஜயபாஸ்கரையும் உள்ளே தள்ளி இரண்டு பாஸ்கரையும் ஒரே ரூமில் அடைத்து வையுங்கள்.


திருட்டு திராவிடன்
ஜூலை 18, 2024 11:19

இதைப் போன்ற கேப்மாரி மொள்ளமாரி பயல்கள் இந்தத் திருட்டு திராவிட கட்சிகளிலேயே உள்ளனர்.


Saran
ஜூலை 18, 2024 10:36

In the next election our people will vote and elect him in a huge marigin. Blame our people first…..


SRIRAMA ANU
ஜூலை 18, 2024 09:37

மோடி கேரண்டி போல எல்லாம் பிராடு தான் இருக்கிறார்கள்


Yaro Oruvan
ஜூலை 18, 2024 11:16

எங்கூர் பக்கம் ஒரு சொலவடை இருக்கு கேண்டீன்ல 40க்கு 40 தின்கிற மெது வடை அல்ல.. உப்பிகளுக்கு வடையைத்தவிர வேறெந்தெ எழவும் தெரியாது அதனால சொல்றேன்...


Ramesh Sargam
ஜூலை 18, 2024 09:13

ஊரெல்லாம் துருட்டு. நெற்றியில் குங்கும பொட்டு.


அருணாசலம்
ஜூலை 18, 2024 09:08

பத்து கோடியோ நூறு கோடியோ திருட்டு தான்.


கோவிந்தராஜ் கிணத்துக் கடல
ஜூலை 18, 2024 07:41

10 ரூபா பாலாஜியின் தம்பி மட்டும். அகப்பட மாட்டான் அவன்.என்ன சந்திர மண்டலத்துக்கு சென்று விட்டான? எல்லாம்.காசு. பணம். செய்யும் வேல


Kasimani Baskaran
ஜூலை 18, 2024 05:12

திராவிடத்தின் இன்னொரு முகம்தான் நில அபகரிப்பு. சென்னையில் சின்னம்மா அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கப்பட்ட சொத்துக்கள் ஏராளம்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை