உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குழந்தை வைத்திருக்கும் பெண்களை சிறை பிடித்ததால் போராட்டம் வாபஸ்

குழந்தை வைத்திருக்கும் பெண்களை சிறை பிடித்ததால் போராட்டம் வாபஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகப்பட்டினம் : நாகை மாவட்டம், பனங்குடியில் உள்ள சி.பி.சி.எல்., நிர்வாகத்தை கண்டித்து, மூன்று ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் நேற்று முன்தினம் வரை 11 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாதுகாப்பு என்ற பெயரில் கிராமத்திற்குள் போலீசார் அத்து மீறுவதால், நிம்மதியிழந்த பெண்கள், சி.பி.சி.எல்., தொழிற்சாலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்திய நிலத்தில் நடப்பட்டிருந்த எல்லைக்கற்களை நேற்று முன்தினம் பிடுங்கி எறிந்தனர்.கற்களை பிடுங்கிய பெண்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இவர்களில், 9 பெண்கள் கைக்குழந்தைகளை வீட்டில் விட்டு வந்ததால், கலங்கியபடி இருந்தனர்.

இவர்களை மட்டும் தனியே தங்க வைத்த போலீசார், இவர்களை ஜாமினில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிந்து சிறையில் அடைக்கப் போவதாக கிராமத்தில் போலீசார் தகவலை கசியவிட்டனர்.அச்சமடைந்த போராட்டக் குழுவினர் போலீசாருடன் நேற்று முன்தினம் இரவு பேச்சு நடத்தினர். இதில், இரு தரப்பிலும் தீர்வு ஏற்பட்டதாக அறிவித்த விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Dharmavaan
மே 13, 2024 14:24

இந்த கொடுங்கோலனுக்கு ஏன் இந்த கும்பல் ஒட்டு போட்டது இனியாவது திருந்துமா கோர்ட் ஏன் சுய வழக்காக எடுத்து போலீசை தண்டிக்கவில்லை


M Ramachandran
மே 13, 2024 13:25

போராட்டத்திற்கான காரணத்திற்கு தீர்வு காணாமல் கைய்ய குழந்தைகளுடன் பெண்களை சிறைபிடிப்பதைய்ய பார்த்தல் கை குழந்தையய் களுக்கு ஷ்டேஷன்னில் பூசணியைகள் உண்டு போல் தெரிகிறது இது கருணாநிதி காலத்தில் நெய்வேலி சம்பவத்தை நினைய்வு கூறுவது போல் தெரிகிறது சட்டம் ஓழுங்கில் நல்ல முன்னெற்றம்


Svs Yaadum oore
மே 13, 2024 12:20

தமிழனை தமிழன் ஆளனும் ஊழல் போதை திராவிடனுங்களை ஆள விட்டால் இப்படித்தான் ஒன்றிய அரசு சீரிய வழிகாட்டுதல் என்று போதையில் உளறுவானுங்க


Sampath Kumar
மே 13, 2024 11:23

மத்திய அரசின் சீரிய வழிகாட்டுதல் படி நடந்தால் உடனே திராவிட மாடல் என்று சொல்லவேண்டியது


Ramanujadasan
மே 13, 2024 12:59

அப்போ மத்திய அரசின் சீரிய வழிகாட்டுதல் படி தான் இங்கே சர்வாதிகாரி ஆட்சி செய்கிறாரா ?


Duruvesan
மே 13, 2024 13:11

என்ன மூரக்ஸ் ஒன்றிய அரசின் சதின்னு பீலா உடாம மத்திய அரசுன்னு பம்மரே, கெத்தா நில்லு அப்போ தான் நீ சிறந்த உபிஸ்னு எல்லோரும் பாராட்டுவாங்க ,பள்ளில சால்வை போடுவாங்க


sridhar
மே 13, 2024 11:06

ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை, கருத்துக்களை நசுக்குவதில் தமிழக போலீசுக்கு தனி திறமை தான்


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 13, 2024 10:53

மத்திய அரசு நிறுவனங்களை எதிர்த்து போராட்டம் செய்ய தூண்டுவது திராவிட மாடல் சிபிசிஎல் சென்னை பெட்ரோலியம் கார்பொரேஷன் லிமிடெட், ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில், கூடங்குளம் அணுஉலை, கல்பாக்கம் அணுஉலை போன்ற அனைத்திற்கும் எதிராக பிரிவினைவாத அரசியல் செய்வது தமிழகத்திற்கு நல்லதல்ல


Ramanujadasan
மே 13, 2024 10:50

கட்சியினரை பயமுறுத்த சர்வாதிகாரி ஆவேன் என்றவர் இப்போது மக்களை பயமுறுத்தி , கொடுமைகள் பல செய்து, எதிர்ப்பவர்களை கைது செய்து, சர்வாதிகாரி ஆகிவிட்டார் கொலைகாரர்கள், கொள்ளைகாரர்கள், போதைபொருள் விற்போர், சாராயம் காய்ச்சுவோர் என பலரும் இவரின் ஆதரவாளர்கள்


M Ramachandran
மே 13, 2024 13:28

கொடுங்கோலன் என்ற பெயர்


ram
மே 13, 2024 10:38

தினமலரை தவிர ஒரு ஊடகமும் இதை பத்தி பேச எழுத வில்லை


Ramanujadasan
மே 13, 2024 10:21

கேவலம், ஆனால் இந்த கேவலமான ஆட்சியை பற்றி எந்த கட்ட பஞ்சாயத்து சிறுத்தையோ, இருபத்தி ஐந்து கோடி கம்யூனிஸ்ட்களோ, இத்தாலி கொள்ளை கூட்ட காங்கிரெஸ்ஸோ, மத வெறியர்களோ, மத மாற்றிகளோ வாயை திறக்க மாட்டார்கள்


Ramanujadasan
மே 13, 2024 09:58

ஆஹா இதுவல்லவா மக்கள் ஆட்சி தியமுகவிற்கு வாக்களித்த அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய தருணம்


sethu
மே 13, 2024 11:37

நான் சார்வாதிகாரியாக மாறுவேன் என விடியல் முதல்வர் சொன்னாரே நமக்குத்தான் அறிவில்லை


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி