உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலையின் கேவலமான செயல் தான் கையெழுத்து இயக்கம்

அண்ணாமலையின் கேவலமான செயல் தான் கையெழுத்து இயக்கம்

வட மாநிலங்களில் எத்தனை இடங்களில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. எத்தனை இடங்களில் இரு மொழியை மட்டும் மாணவர்கள் படித்து வருகின்றனர். இது தொடர்பான புள்ளி விபரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என, வேண்டுகோள் விடுத்து கேள்வி எழுப்பினார் தமிழக அமைச்சர் தியாகராஜன். ஆனால், அது குறித்து எந்த பதிலையும் சொல்லாமல் அமைதி காக்கிறது பா.ஜ.,வும், மத்திய அரசும். பிழைப்புக்காக வட மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் அம்மாநிலங்களை சார்ந்தோரின் குழந்தைகள் கூட தமிழகத்தின் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்களுக்கு இங்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், மும்மொழிக் கொள்கையை தமிழகம் விரும்புவது போன்றதொரு தோற்றத்தை உருவாக்குவதற்காக, பா.ஜ.,வினர் கையெழுத்து இயக்கம் துவங்கி உள்ளனர். யாரும் கையெழுத்திட ஆர்வம் காட்டவில்லை. அரசியல் பரபரப்புக்காக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஏற்பாடு செய்திருக்கும் கேவலமான செயல் தான், கையெழுத்து இயக்கம். - சிவசங்கர், தமிழக அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

R.P.Anand
மார் 11, 2025 12:03

அப்போ நீட் தேர்வுக்கு நீர் வாங்கி உதார் விட்டது


S.V.Srinivasan
மார் 11, 2025 07:57

ஏன் உங்க சின்ன முதலாளி அதான்யா உதயநிதி நீட் தேர்வு ரத்துக்கு கையெழுத்து வாங்கினது கேவலமா தெரியலையா உனக்கு. உனக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்த தக்காளி சட்னி. நல்ல ந்யாயம்ப்பா .


pandit
மார் 11, 2025 07:01

நீட் கையெழுத்து வாங்கியது யாருடைய கேவலமான செயல் என்று அமைச்சர் தெளிவுபடுத்துவாரா


ramani
மார் 11, 2025 06:59

நீங்க நீட் ரத்துக்கு கையெழுத்து இயக்கம் நடத்தினீங்களே அது எதுல சேர்த்தி


raja
மார் 11, 2025 06:44

கொத்தடிமை கூமுட்டை கொத்தடிமை...


Vijay
மார் 11, 2025 06:38

அப்ப நீட் தேர்வுக்கு எதிராக நீங்க நடத்திய கை எழுத்து இயக்கம் புனிதமானதா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை