உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமாதி கட்ட பணம் இருக்கு... ஊதியத்துக்கு இல்லையா: சீமான்

சமாதி கட்ட பணம் இருக்கு... ஊதியத்துக்கு இல்லையா: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று அளித்த பேட்டி: மத்திய அரசிடமிருந்து நிதி வராததால், ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியவில்லை என, தமிழக அரசு கூறுகிறது. சமாதி, கார் பந்தயம், சதுரங்கப் போட்டி, பஸ் ஸ்டாண்ட் கட்டுவது என, கோடிக்கணக்கில் செலவு செய்கின்றனர். ஆனால், ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கான நிதியைக் கேட்டு வாங்க முடியாத நிலையில், எதற்காக தி.மு.க., கூட்டணியில் 40 எம்.பி.,க்கள்? தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது எனக் கூறி வரும் தி.மு.க., முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் நலம் பாதிப்பு என்றால் ஏன் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் செல்வது இல்லை. தனியார் மருத்துவமனைக்கு செல்லும்போது, எதற்காக அரசு மருத்துவமனைகள்? பின் தங்கிய ஜாதியினர் முன்னேற்றம் அடைந்த பின், அவர்களுக்கு எதற்காக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். விஜய் கட்சியினர் நடத்தும் மாநாட்டில் நான் பங்கேற்பது சரியாக இருக்காது. தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் உழைக்க நிறைய அரசியல் தலைவர்கள் தேவைப்படுகின்றனர். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஆக 28, 2024 07:41

கட்டுறது ஒரு சமாதி. அதை வெச்சு கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு வருசக்கணக்கில் சம்பளம் தர முடியுமா? வாசலில் பிச்சைக்காரன் இருக்கான்னா சீமான் சாப்பிடாம பட்டினி கிடப்பாரா?


Mr Krish Tamilnadu
ஆக 28, 2024 07:07

ஐ.டி. ஊழியர்கள் அதிரடி சம்பளம், அரசு ஊழியர்கள் சம்பளம். இவைகளை வைத்து தான் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. மற்றவர்களின் வாழ்க்கை தரத்தை ஒருவரும் ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை. இன்று நவீன தொழில்நுட்பத்தில் விவசாய உற்பத்தி செலவு விண்ணை முட்டுகிறது என விவசாய பொருட்கள் விலையும் ஏறுமுகம். 100 ரூபாய்க்கும் குறைவான நோட்டுகளும் விரைவில் டேமேஜ் ஆகி விடுகின்றன. அத்தகைய நோட்டுகளை சம்பளமாக பெற்று கொண்டு, தடுமாறும் சாதாரண மனிதனை பற்றி யாரும் கவலை படுவதில்லை. நிலைமைக்கு தகுந்தது போல், தனியார் விதிகள் போல் அரசு சம்பள விதிகளும் மாற்றி கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நாடும் உருப்படும். அரசு வேலை மோகமும் போகும். ஓட்டு வங்கிக்காக தான், இத்தனை வருடங்களில் அரசு ஊழியர் சம்பளம் திராவிட கட்சிகளின் ஆட்சிகளில் தான் ஏறி கொண்டே போகுகிறது.


varghees
ஆக 28, 2024 13:19

உண்மை சரியான பதில் சார் அரசு இதை கவனத்தில் கொள்ளவும்.


Rajarajan
ஆக 28, 2024 06:01

அதுசரி. சமாதி காட்டினா, திராவிட அடிமைகள் பஜனை பாடவும், தயிர்வடை வைக்கவும், முரசொலி வாங்கவும் வருவாங்க. எல்லாம் ஒரு வருமானம் தானே. பணிஓய்வு ஊழியர்கிட்ட அப்படி என்ன இருக்க போகுது. அரசியலுக்கும், வருமானத்துக்கும் அடிமைகள் முக்கியமா ? இல்ல பணிஓய்வு பெற்றவங்க முக்கியமா. தம்பி தமாஷா பேசுது.


Kasimani Baskaran
ஆக 28, 2024 05:17

சமாதியை வைத்து பெருமையடையலாம்... அனால் சம்பளம் கொடுப்பதால் பெருமையடைய முடியுமா என்றால் நிச்சயம் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை