உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கச்சத்தீவு மீட்பு அம்சம் இல்லை: பா.ஜ., கூட்டணி கட்சிகள் ஏமாற்றம்

கச்சத்தீவு மீட்பு அம்சம் இல்லை: பா.ஜ., கூட்டணி கட்சிகள் ஏமாற்றம்

சென்னை : கச்சத்தீவை மீட்பது குறித்த அம்சம், பா.ஜ., தேர்தல் அறிக்கையில் இடம் பெறாததால், அதன் கூட்டணி கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளன.கருணாநிதி முதல்வராக இருந்த போது, கச்சத்தீவை இலங்கையிடம், மத்திய காங்கிரஸ் அரசு தாரை வார்த்தது. கச்சத்தீவு நம்மிடம் இல்லாததால், கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். கச்சத்தீவை மீட்டால், மீன்பிடி தொழில் களைகட்டும், நாட்டிற்கு அன்னிய செலாவணி அதிகம் கிடைக்கும், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். எனவே, கச்சத்தீவை மீட்க வேண்டும் என, நீண்ட காலமாக தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.கச்சத்தீவை தி.மு.க., அரசு தாரை வார்த்தது குறித்த விபரத்தை, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பெற்று, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். பிரதமர் மோடி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும், இப்பிரச்னை குறித்து சமீபத்தில் காரசாரமாக கருத்துக்களை வெளியிட்டனர்.இது, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில், தி.மு.க.,விற்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், பா.ஜ., தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் நேற்று டில்லியில் வெளியிட்டனர். இதில், கச்சத்தீவு மீட்பு குறித்த அம்சம் இடம்பெறும் என, தமிழக பா.ஜ., கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்தன. ஆனால், அதுபற்றிய தகவல் எதுவும் இடம் பெறவில்லை. அதேநேரத்தில், கடலோர உள்கட்டமைப்பு திட்டம் வாயிலாக தீவுகளை உலகளாவிய சுற்றுலா தலமாக மேம்படுத்துவோம் என்ற, வாக்குறுதி இடம்பெற்று உள்ளது. இதில், கச்சத்தீவும் நிச்சயம் இடம் பெறும். இறுதிகட்ட பிரசாரத்தில், பிரதமர் மோடி இதை அறிவிப்பார் என்ற நம்பிக்கையில் தமிழக பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

venugopal s
ஏப் 15, 2024 15:01

பாஜக தமது தேர்தல் வாக்குறுதிகளில் கச்சத்தீவை மீட்போம் என்று சொல்லி இருந்திருந்தாலும் தமிழக மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள்!


Selvakumar Krishna
ஏப் 15, 2024 18:06

சரியான கருத்து, இந்தியாவில் ஈடுபடும், இங்கே அல்ல


அசோகன்
ஏப் 15, 2024 14:58

ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ் நாட்டுக்கு தரமாட்டேன் என்று கர்நாடக காங்கிரஸ் சொன்னாலும் அதை பற்றி எந்த பயலும் வைத்திருக்கிக்கமாட்டார்கள்.... கட்ச தீவை இவர்கள் பணம் வாங்கிக்கொண்டு தாரை வார்பார்களாம் மோடி மீட்கணுமாம்..... இது உலக நாடுகள் தொடர்பானது அதை எப்படி அறிக்கையில் கொடுக்கமுடியும்.. அதேபோல் பல லட்சம் கோடி கருப்பு பணத்தை திமுக காங்கிரஸ் ஆட்சியில் தான் வெளிநாட்டுக்கு போனது... அதை ஏன் மீட்டு அக்கௌன்ட் ல 15 லட்சம் போடலைனு கனிமொழி வாய் கூசாமல் பேசுகிறார்... கொள்ளை அடித்து வெளிநாட்டில் போட்டது இவர்கள் ஆனா மோடி ஏன் மீட்கவில்லை என கேட்கிறார்கள்


GMM
ஏப் 15, 2024 13:15

காங்கிரஸ், திமுக கட்சதீவை சர்வதேச பிரச்சனை ஆக்கிவிட்டது மத்திய அரசுக்கு எல்லா கட்சியும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் தேசிய நதி நீர் இணைப்பு திட்டம் தேவை மாநிலங்கள் அதிகாரம் குறைக்க வேண்டும் நில பதிவு/உடமை நகல் மத்திய அரசு ஒருவருக்கு ஒரு பதிவு எண் என்ற முறையில் பராமரிக்க வேண்டும் தேசிய போலீஸ் நிலையம் நிறுவ வேண்டும் பணம் எங்கும் எடுக்கும் வசதி போல் எங்கும் வாக்களிக்கும் / ஆன்லைன் வசதி வேண்டும் காங்கிரஸ் கூட நீதிபதியை நீதிபதி தேர்வு செய்யும் முறை மாற்ற வேண்டும் என்று கூறுகிறது பழைய சட்டங்கள் நீக்கி, மாற்றி அமைத்து புதிய டிஜிட்டல் அரசியல் சாசனம் வேண்டும் குற்றவாளிக்கு சாதகமாக வக்கீல் வாதாடியதை வாதி/பிரதி வாதி அரசு நிர்வாகம் மூலம் நிரூபித்தால் தண்டிக்க சட்டம் வேண்டும் குடிமக்கள் பதிவேடு அவசியம்


Barakat Ali
ஏப் 15, 2024 12:45

நாங்க கொடுத்துட்டு வருவோம் பாஜக பத்தாண்டுகளா ஏன் மீட்கவில்லை ன்னு கேக்குறானுங்க


raja
ஏப் 15, 2024 11:40

அதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கட்ச தேவ மீட் பெண்ணும் தமிழர் உரிமையை காப்பேன்னும் சொல்லிகிட்டு இருக்காரே பார்ப்போம் எப்போ மீப்பாருண்ணு ஓட்டு போட்டு உக்காத்தி வச்சிருகோமுல்ல


Ramesh Sargam
ஏப் 15, 2024 11:28

கச்சத்தீவு மீட்பு மிகவும் சிறிய விஷயம் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை கட்டாயம் ஒரு பிரச்சினையும் இல்லாமல் மீட்கும் அது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை கவலையை விடுங்கள்


Sampath Kumar
ஏப் 15, 2024 10:27

எங்களுக்கு தெரியாத சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று பத்து வருஷம் இதை பற்றி கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார்கள் தேர்தல் வந்ததுமதித்தேர் பாசம் பொது கொண்டு வந்து ஏதிரி காட்சிகளை சாடுவது வாடிக்கையாக வைத்து கொடு உள்ள ஒரே கட்சி பிஜேபி தான் இம்புட்டு பேசும் பிஜேபி காரன் கட்ச தீவை மீட்ட ஏடுக்கமுடிய்மா ?அய்யா ஜெய் ஷங்கர் , மோடி இவர்கள் எல்லாம் வை சொல்ல வீர்கள் தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் கூமுட்டைகளென்று நினைப்பு போல அம்புட்டும் அரசியில் ட்ராமா பிஜேபி கூடசேர்ந்து அம்புட்டு பயலுகளும் ட்ராமா ஆர்ட்டிஸ்ட் தான் இவங்களை நம்பி இறங்கினால் மண் குதிரையை நம்பி ஆற்றில் இருக்க வேண்டிய நிலைதான்


அப்புசாமி
ஏப் 15, 2024 09:48

அண்ணாமலைக்கே வெளிச்சம். கச்சத்தீவை மீட்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிட்டதா பேசுனாரே? 2047 ல் மீட்கப்படும்னாவது சொல்லியிருக்கலாம்.


Saai Sundharamurthy AVK
ஏப் 15, 2024 09:25

ஐந்து மக்களவை எம்.பிக்களை கொண்ட அருணாச்சல பிரதேசத்தில், நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக தங்கள் வேட்பாளர்களை ஒருவரை கூட காங்கிரஸ் கட்சி நிறுத்தவில்லை. ஏன் தெரியுமா ??? 1. மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, காங்கிரஸ் கட்சிக்கும், சீன கம்முனிஸ்ட் கட்சிக்கும் இடையே 2009ம் ஆண்டில் MoU என்று சொல்லப்படுகிற ஒரு ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டது. மேலோட்டமாக பார்த்தால் இந்த திட்டம் ஏதோ இந்தியாவுக்கு நன்மை செய்யும் திட்டம் போல் தோன்றும். தேர்தலில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தினால் அது சீனவுடனான ஒப்பந்தத்தை மீறுவதாக அமையும். இதனால் சீனா கோபம் அடையும் என்று தான் காங்கிரஸ் பயந்து ஒதுங்கிக் கொண்டுள்ளது. 2. நன்கு கவனித்து பார்த்தால், ராகுல்காந்தி சமீபத்தில் நடத்திய தனது யாத்திரையை கூட அருணாச்சலப் பிரதேச பகுதிக்குள் கொண்டு செல்லவில்லை? இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், "அருணாச்சல பிரதேச மாநிலத்தை, கட்சதீவு போல சீனாவுக்கு தாரை வார்க்கத்தான் அப்படியொரு ஒப்பந்தம் போடப் பட்டிருக்கிறது. அதற்கு பிரதிபலனாக பல கோடிகளை சீனாவிடம் இருந்து லஞ்சமாக வாங்கி கொண்டுள்ளது. அந்த பணத்தை அப்படியே சீனாவிலேயே முதலீடும் செய்திருக்கிறது. ஆனால், அந்த சமயத்தில்,"மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரும்" என்று காங்கிரஸ் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை.


jayvee
ஏப் 15, 2024 09:23

கட்ச தீவை மீட்பது என்பது ஒருபோதும் இயலாத காரியம் தாரைவார்த்தவர்களை குறை சொல்லவே கச்சத்தீவை பயன்படுத்தமுடியும் ஒருவேளை சீனாவைவிட நாம் பெரியநாடக மாறினால் சீன நம்மை பார்த்து பயந்தால், அல்லது சீன என்ற நாடே அழித்துவிட்டால் நாம் கச்சத்தீவை மீட்பது குறித்து யோசிக்கலாம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை