உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை: திருமா

தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை: திருமா

சென்னை : ''தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறினார்.சென்னை, பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், கலைஞர் நுாற்றாண்டு நிறைவு விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை, வி.சி., தலைவர் திருமாவளவன், நேற்று பார்வையிட்டார்.பின், அவர் அளித்த பேட்டி: கருத்துக் கணிப்புகளை, ஒரு போதும் வி.சி.,க்கள் பொருட்படுத்துவதில்லை. 10 ஆண்டுகால இருண்ட ஆட்சி, இந்தியாவை அதலபாதாள சரிவிற்கு கொண்டு சென்றுள்ளது.மக்கள் எழுதிய தீர்ப்பு, ஜூன் 4ல் தெரியவரும். இந்தியாவை சூழ்ந்த இருள் அகலும்; புதிய வெளிச்சம் பிறக்கும்.'இண்டியா' கூட்டணி ஆட்சியில் மலர உள்ளது. இக்கூட்டணி வெற்றிக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமையும். தமிழகத்தில், தாமரை மலர இடமே இல்லை. தமிழகத்தில், 40 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வெல்லும். தேர்தலுக்கு முன்பே, பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இண்டியா கூட்டணி கட்சிகளிடையே ஜனநாயக புரிதல் உள்ளது.தேர்தல் முடிவுக்கு பின், குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்படும். அப்போது, பிரதமர் வேட்பாளரை தீர்மானிப்போம். மோடி, ஆண்டுக்கொரு பிரதமர் என, இண்டியா கூட்டணியை விமர்சித்தார். அதன் வாயிலாக அவர், இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என ஒப்புக்கொண்டுள்ளார்.விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி, சமூக நல்லிணக்க பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகள் மோடி ஆட்சி காலத்தில் தான் நடந்துள்ளது. மக்கள் பொறுக்க முடியாத அளவுக்கு சங்கடங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.எனவே தான், ஆண்டுக்கொரு முறை பிரதமர் இருந்தால் தவறில்லை என கூறினேன். அது ஜனநாயக விரோத முடிவும் அல்ல; அதை நான் வரவேற்கிறேன். தமிழகத்தைப் பொறுத்த வரை தாமரை மலர வாய்ப்பே இல்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Ravichandran S
ஜூன் 04, 2024 08:08

இந்தி கூட்டணி ஜெயித்தால் திருமா பிரதமர்


GarudaRajesh
ஜூன் 03, 2024 23:14

தாமரை ஒரு தொகுதி இல்ல 3 தொகுதியில் தமிழகத்தில் வெற்றி பெற்றால் உனது கட்சியை கலைத்து விடுவாயா? சவால் விட திராணி இருக்கா


Raa
ஜூன் 03, 2024 15:58

யாரு கேட்டா?


Swaminathan Nath
ஜூன் 03, 2024 13:48

இவர், DMK விடம் காசு வாங்கி கொண்டு ஜால்ரா அடிக்கும் கூட்டம், அவர்கள் போடும் 2 சீட் காக என்ன வேண்டுமானாலும் பேசும் கயவர்கள், ஜாதி கட்சி நடத்தும் உனக்கு தனியாக நின்றால் டெபாசிட் கிடைக்காது.,


ram
ஜூன் 03, 2024 13:08

ஜாதி கட்சி தேறுமா தனியாக நின்றால் டெபாசிட் கூட வாங்க முடியாது இதில் பாஜகவை பத்தி பேச வந்துட்டார்


Ramesh Sargam
ஜூன் 03, 2024 11:58

ஆனால் உனக்கு புழல் சிறைக்கு செல்ல வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது.


W W
ஜூன் 03, 2024 10:36

வாயில் வடை சுடும் குருமா, பல்லாக்கு ஏறுவதும் வாயாலே அந்தர் பல்டி அடிப்பதும் வாயாலேயே என்பதை வரும் எலக்ஷன் ரிசல்டில் பார்க்கலாம்.


sankar
ஜூன் 03, 2024 08:46

சமூக விரோதி இப்படித்தான் கூறுவார்


Bellie Nanja Gowder
ஜூன் 03, 2024 08:00

இவரை போன்ற தி மு க ஜால்ராக்கள் இருக்கும்வரை, தமிழகத்திற்கு விடிவு காலம் என்பது கானல் நீரே. இவர்களின் புரட்டுகளையும் உடைத்து அண்ணாமலை தலைமையில் பி ஜெ பி தமிழகத்தில் ஆட்சியை பிடித்து இந்த பீடைகள் பிடியில் இருந்து தமிழகத்தை தலை நிமிர செய்யும். அது இறைவன் அருளால் 2026 இல் நிச்சயம் நிறைவேறும். ஜெய் ஸ்ரீ ராம்.


sankaranarayanan
ஜூன் 03, 2024 07:47

என்னதான் இவர் கட்சிக்கு தாளம் போட்டாலும் தலை கீழே நின்றாலும் இவருக்கு ஓர் அமைச்சர் பதவி என்பதை அவர்கள் கொடுக்கப்போவதில்லை கட்சி ஆரம்பித்து கட்சிக்கு வயது முப்பதை கடந்தும் சட்டசபையில் ஒரு மூலையிலேதான் உக்கார வைப்பார்கள் என்ன செய்வது தலை விதி


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை