உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சியில் இங்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை!

தி.மு.க., ஆட்சியில் இங்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை!

சென்னை:'தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மக்களே நமக்கு நாமே பாதுகாப்பு' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:கடந்த 24 மணி நேரத்திற்குள் வந்த செய்திகள். புதுக்கோட்டையில் மர்ம நபர்களால் இளைஞர் வெட்டிப் படுகொலை; தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில், 21 வயது இளைஞர் கொலை; தேனியில் குண்டர் சட்டத்தில் சிறை சென்று வந்தவரை, கொடிய ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொல்ல முயற்சி...இனி தி.மு.க., அரசின் முதல்வரிடம், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வலியுறுத்தி, எந்த பயனும் இல்லை. எனவே, மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை, காவல் துறை அதிகாரிகள் காக்க வேண்டும்.தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பது உறுதியாகி விட்டது. மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.அவரது மற்றொரு அறிக்கை:விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த காளையார்குறிச்சி பகுதியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் இறந்துள்ளனர். இம்மாவட்டத்தின் பட்டாசு ஆலைகளில், தொடர்ச்சியாக வெடி விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இது குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வேடிக்கை பார்க்கிறது தி.மு.க., அரசு.தமிழகம் முழுதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு தரப்பரிசோதனை மேற்கொள்வதுடன், வெடி விபத்தை தடுப்பதற்கான புதிய கொள்கையை வடிவமைத்து செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இணைப்பு குறித்து பேச வாய்ப்பூட்டுபன்னீர்செல்வம், சசிகலாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என, மூத்த நிர்வாகிகள் வலியுறுத்திய தகவல் வெளியான நிலையில், லோக்சபா தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனை கூட்டம், அ.தி.மு.க.,வில் இன்று துவங்குகிறது. இந்த கூட்டத்தில், நீக்கப்பட்டவர்கள் குறித்தும், அவர்களை சேர்ப்பது குறித்தும் பேச, நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்குக் கிடைத்த தோல்வியை அடுத்து, கட்சி அமைப்பை சீர்படுத்த, 117 மாவட்டங்கள் பிரித்து, லோக்சபா தேர்தலில் சரியாக பணியாற்றாத மாவட்ட செயலர்களை மாற்றி, துடிப்புடன் செயல்படுகிற இளைஞர்களை நியமிக்க, பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அதை செயல்படுத்துவதற்கு முன்பாக, இன்று முதல், 19ம் தேதி வரை, தொகுதி வாரியாக, கட்சி நிர்வாகிகளை அழைத்து, தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்க உள்ளார். முதல் கட்டமாக, 26 லோக்சபா தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டங்கள், இன்று முதல் வரிசையாக நடக்க உள்ளன.இதற்கிடையில், ஆலோசனை கூட்டத்தில் பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து யாரும் பேசக் கூடாது என பழனிசாமி திடீர் தடை உத்தரவு போட்டிருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ