உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., ஆட்சி சாதனையில் 10% கூட இந்த ஆட்சியில் இல்லை * பன்னீர்செல்வம் ஆதங்கம்

அ.தி.மு.க., ஆட்சி சாதனையில் 10% கூட இந்த ஆட்சியில் இல்லை * பன்னீர்செல்வம் ஆதங்கம்

சென்னை:'தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு உடனே பணி நியமன ஆணை வழங்க வேண்டும்' என்று, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை, உடனுக்குடன் நிரப்பினால்தான் தரமான கல்வி வழங்க முடியும். ஆனால், தமிழகத்தில் கடந்த 44 மாத தி.மு.க., ஆட்சியில், பெரிய அளவில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.கடந்த 2024 பிப்ரவரி 4ம் தேதி நடந்த ஆசிரியர் நியமன தேர்வில், ஆசிரியர் தகுதி தேர்வில் வென்ற, 40 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் இருந்து, 2,800 பேர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆனால், ஒன்பது மாதங்களாகியும், அவர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.அ.தி.மு.க., ஆட்சியில், 68,481 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டு, இரண்டே முக்கால் ஆண்டுகளில், 51,757 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரே நாளில், 20,920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. தி.மு.க., ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும், அ.தி.மு.க., அரசின் சாதனையில் பத்து சதவீதத்தைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. தி.மு.க., அரசின் அலட்சியத்தால், ஆசிரியர்கள், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நியமன தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,800 ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ