உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல் பிரசாரம்

இன்று ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல் பிரசாரம்

சென்னை:இன்று மாலை 4:00 மணிக்கு திருநெல்வேலியிலும், 6:30 மணிக்கு கோவையிலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பிரசாரம் மேற்கொள்கிறார். கோவை பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினும், ராகுலும் ஒரே மேடையில் பேசுகின்றனர்.காங்கிரஸ் சார்பில், டில்லியிலிருந்து முதல் தலைவராக, இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள ராகுல் இன்று வருகிறார். திருநெல்வேலியில் பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரில் உள்ள பெல் பள்ளிக்கூட மைதானத்தில், இன்று மாலை 4:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் ராகுல் பேசுகிறார்.அதில் பங்கேற்று விட்டு, மாலை 6:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கோவை பொதுக் கூட்டத்தில் ராகுலுடன், முதல்வர் ஸ்டாலினும் இணைந்து ஒரே மேடையில் பேசுகின்றனர். இந்த இரண்டு பொதுக் கூட்டங்களிலும், 50,000 பேர் வரை பங்கேற்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M Ramachandran
ஏப் 12, 2024 20:22

போட்டா போட்டி ரீல் மாஸ்டர் ட்டைய்டிலுக்கு


S.Senthilkumar
ஏப் 12, 2024 14:14

No use for Congress and DMK


செல்வம்
ஏப் 12, 2024 08:30

ஓஹ் மை காட் சேவ் தி பீப்பிள் ????


Venugopal Gopalsamy
ஏப் 12, 2024 07:13

காங்கிரஸ் பார்ட்டி இனி எப்போதும் ஆட்சிக்கு வரவே முடியாது


Indhuindian
ஏப் 12, 2024 06:43

பாவம் அந்த குவாட்டர் பிரியாணி கைக்காசு கும்பல் எப்படிதான் காசு வாங்கறவரைக்கும் சமாளிக்க போறாங்களோ தெரியலே


Raj
ஏப் 12, 2024 06:18

ஜோலி முடிஞ்சு போச்சு


மேலும் செய்திகள்







புதிய வீடியோ