உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு

இன்று டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு இன்று நடக்க உள்ளது.கிராம நிர்வாக அலுவலர், வனக்காவலர் உள்ளிட்ட, 6,244 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' தேர்வு இன்று நடக்க உள்ளது. இத்தேர்வு எழுத, 20 லட்சத்து 37,101 பேர் விண்ணப்பித்தனர். இதில், 327 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.விண்ணப்பித்தவர்களில், 8.18 லட்சம் ஆண்கள், 12.19 லட்சம் பெண்கள், 150 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 20 லட்சத்து 36,777 பேர் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்காக 38 மாவட்டங்களில், 7,247 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 432 தேர்வு மையங்களில், 1.33 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை