உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறையில் திருநங்கைக்கு தொல்லை: எஸ்.பி., - டி.ஐ.ஜி., துாக்கியடிப்பு

சிறையில் திருநங்கைக்கு தொல்லை: எஸ்.பி., - டி.ஐ.ஜி., துாக்கியடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சி, அரியமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில், திருச்சியைச் சேர்ந்த சாரங்கன், 32, என்ற திருநங்கை கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் சி.பி., - 1 தனிச்சிறையில், சில மாதங்களுக்கு முன் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த மாரீஸ்வரன் என்ற சிறைக்காவலர், சாரங்கனை அடிக்கடி ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளார்; இது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.இதுகுறித்து சாரங்கன், திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், டி.ஐ.ஜி., ஜெயபாரதியிடம் புகார் அளித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்டப்பணிகள் ஆணையத்தில், சாரங்கன் புகார் அளித்தார்.சுப்புராமன் என்ற வக்கீல் நியமிக்கப்பட்டு, விசாரணை நடந்தது. திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், டி.ஐ.ஜி., ஜெயபாரதி, ஏட்டு மாரீஸ்வரன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள், 11ம் தேதி உத்தரவிட்டார்.இரு நாட்களுக்கு முன், டி.ஐ.ஜி., ஜெயபாரதியை வேலுார் பயிற்சிப் பள்ளிக்கு டி.ஐ.ஜி.,யாகவும், கண்காணிப்பாளர் ஆண்டாளை, திருச்சி பயிற்சிப் பள்ளிக்கு கண்காணிப்பாளராகவும் நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

புகார் கிடப்பில் போட காரணம்

நான்கு மாதங்களுக்கு முன், சென்னையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றலாகி வந்த மாரீஸ்வரன், சென்னையில் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக இருந்தவரின் வீட்டிலும், பின், புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடத்தில் உள்ள அதிகாரியிடமும் வேலை பார்த்துள்ளார். அந்த செல்வாக்கை வைத்தே, மாரீஸ்வரன் மீதான புகார் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் புகாரை கண்டுகொள்ளாமல் இருக்க, 50,000 ரூபாய் கைமாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

சந்திரசேகர்
ஜூலை 17, 2024 15:31

அது என்ன மாயமோ மர்மமோ தெரியவில்லை. அரசாங்க அதிகாரிகள் தவறு செய்தால் ஒன்று இடமாற்றம் அல்லது சஸ்பெண்ட் மட்டும் தான் தண்டனை. ஏன் அவர்களை வேலையை விட்டு நீக்குவதில்லை என்று புரிய மாட்டேங்குது. இங்கு லஞ்சம் வாங்கியவர் அடுத்த இடத்தில் வாங்க போகிறார். இங்கு தவறு செய்தவர் அங்கு போய் தவறு செய்ய போகிறார். தண்டனை மிக லேசானது. நான் தண்டிப்பேன்


Padmasridharan
ஜூலை 17, 2024 13:31

ஏன் இவர்களின் புகைப்படங்கள்? வெளியாகவில்லை.


Kasimani Baskaran
ஜூலை 17, 2024 11:28

இவர்களை மாடு மேய்க்க அனுப்பலாம் என்றால் அந்த மாடுகளுக்குக்கூட பாதுகாப்பில்லை


ஆரூர் ரங்
ஜூலை 17, 2024 11:11

சூப்பர் டீலக்ஸ் படத்தில் காட்டிய போது நம்பாததை இப்போ நம்ப வேண்டியுள்ளது.


Thamilarasu K
ஜூலை 17, 2024 11:00

இதை மற்றவர்கள் செய்தால் கைது, இவர்கள் செய்தால் இடமாற்றம்


Kanns
ஜூலை 17, 2024 10:52

Superiors Not Seriously Punishing Police Criminals Must be Punished Severely


Anand
ஜூலை 17, 2024 10:27

மற்ற பெண்களின் நிலை?


Ms Mahadevan Mahadevan
ஜூலை 17, 2024 09:36

காவல் துறையினர் ஒழுக்கத்துடன் கண்ணியமாக நடக்க வேண்டும். ஆனால் தமிழ் நாட்டில் சொல்லவே நா கூ சு து


duruvasar
ஜூலை 17, 2024 09:32

மாரீஸ்வரன் முரட்டு திராவிடன் போல் தெரிகிறது.


UTHAMAN
ஜூலை 17, 2024 09:03

இவனுக அயோக்கிய தனத்தை சவுக்குசங்கர் வெளியிடுவது மட்டும் இவனுகளுக்கு அவமானமாம்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை