உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குல தெய்வ வழிபாடு தகவல்: கவர்னர் அலுவலகம் விளக்கம்

குல தெய்வ வழிபாடு தகவல்: கவர்னர் அலுவலகம் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'குல தெய்வ வழிபாடு குறித்து, கவர்னர் கூறியதாக பரவும் உண்மைக்கு மாறான தகவலை நம்ப வேண்டாம்' என, கவர்னர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.தமிழக கவர்னர் அலுவலகமான ராஜ் பவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழர்களை சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான். சாராய சாவுகளுக்கு காரணமான, குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும் என, கவர்னர் ரவி கூறியுள்ளதாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது.கவர்னரின் புகழுக்கும், கண்ணியத்துக்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்படுத்தும் வகையிலும், இந்த உண்மைக்கு புறம்பான செய்தி, உள் நோக்கத்துடன் பரப்பப்படுகிறது.மேற்கண்ட தவறான செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். இந்த பொய் தகவலை பரப்புவோர் குறித்து, விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

தமிழ்வேள்
ஜூன் 25, 2024 11:11

சாராயம் விற்க , தேவையானால் , கடை வாசலில் வாதைகளுக்கும் , மாடன்களுக்கும் நிலையம் போட்டு வியாபாரத்தை பேருக்கும் திராவிட திருட்டு அரசு ..


தஞ்சை மன்னர்
ஜூன் 25, 2024 10:49

எங்களுக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்று சொல்லுவது வாடிக்கைதானே


முனியாண்டி
ஜூன் 25, 2024 09:28

எங்க ஊரில் முனீஸ்வரனுக்கு சுருட்டு படைச்சு முட்டை மூட்டையாய் விடாம கொளுத்துறாங்க. 100 மீட்டர் தொலிவுக்கு சுருட்டு நாத்தம். பொல்யூஷன். உணவு படையலை உட்டுட்டு சுருட்டு படையல் ஜோரா நடக்குது. யார் தொடங்கி வெச்சாங்களோ தெரியலை. சாமியே இத்தனை சுருட்டு குடிச்சா கேன்சர் வந்து போய்ச் சேந்துரும்.


Velan Iyengaar
ஜூன் 25, 2024 09:44

சுருட்டு தானே ??


Svs Yaadum oore
ஜூன் 25, 2024 09:54

கள்ளு சாராயம் படையல் பிராணிகள் பலி என்பவை உண்டு ..... பிராணிகள் வதை கூடாது என்பதுதான் வள்ளலார் சொன்னது .. ஆனால் விடியல் திராவிடனுங்க ஆட்சியில் தெருவுக்கு தெரு அசுத்தமான பிரியாணி கடை ....


Svs Yaadum oore
ஜூன் 25, 2024 09:10

வள்ளலாரை விடியல் திராவிடனுங்க கந்து வட்டிக்கு குத்தகை எடுத்திருக்கானுங்க ....


Svs Yaadum oore
ஜூன் 25, 2024 09:08

வள்ளலாரை மேய்ப்பர் சந்தித்தார் என்று சொன்னால் உடனே விடியல் அதுக்கு பொங்கல் வைக்கும் ....


Velan Iyengaar
ஜூன் 25, 2024 08:04

வள்ளலார் சனாதனவாதி என்று சொல்லுவது உண்மை என்றால் இதுவும் உண்மையாக தான் இருக்கும்.. நெருப்பில்லாமல் புகையுமா ??


Velan Iyengaar
ஜூன் 25, 2024 07:50

அள்ளித்தெளித்த கோலத்தில் அவசரகதியில் ஸாஸ்திரங்களுக்கு புறம்பான முறையில் கட்டிமுடிக்கும் முன்னே கோவிலை திறந்து என்ன சாதித்தீர்கள்?? இப்போ ஒரு மழைக்கே கோவில் ஒழுகுதாம் .... அப்போ எந்த லட்சணத்தில் ராமருக்கு கோவில் கட்டி இருக்கிறார்கள் என்று பாருங்கள் மக்களே இதிலும் ஊழலா ??? இல்லை த்துணை கவனக்குறைவா ?? இந்த மாதிரி ஒழுகும் கோவிலை கட்ட தான் பொதுமக்களிடம் இருந்து அத்துணை நன்கொடை வாங்கினீர்களா ???? அத்தனை பிரச்சனைகள் செய்து கோவிலை கட்ட பார்த்தீர்களா ???


ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 09:16

எந்த சாஸ்திரப்படி ஆலயம் எழுப்பப்பட்டது என்பதே உமக்குத் தெரிய வாய்ப்பில்லை. மதரசாவில் அதெல்லாம் கற்றுக் கொடுப்பதில்லையே.


Venkates.P
ஜூன் 25, 2024 10:41

மிஸ்டர் கிரிப்டோ, நீ எல்லாம் அதை பத்தி கவலை படாதே


venugopal s
ஜூன் 25, 2024 07:15

இதுபோன்ற தகிடுதத்த வேலைகள் எல்லாம் பாஜகவின் ஐ டி விங்குக்குத் தானே பழக்கமான ஒன்று, இப்போது அவர்களுக்குப் போட்டியாக இவர்களும் இறங்கி விட்டார்களா?


ramani
ஜூன் 25, 2024 06:49

எப்படியாவது தன் கட்சியை திமுகவை காப்பாற்ற பார்க்கிறது திமுக ஐடி விங். பாவம் அதன் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிகிறது. இனிமேலும் தோல்வியில் தான் முடியும்


ramani
ஜூன் 25, 2024 06:46

திமுகவின் ஐடி விங் பாவ


மேலும் செய்திகள்