உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தோட்டத்தில் தொல்லை கொடுத்த குரங்கு; ஆத்திரத்தில் சமைத்து சாப்பிட்ட இருவர் கைது

தோட்டத்தில் தொல்லை கொடுத்த குரங்கு; ஆத்திரத்தில் சமைத்து சாப்பிட்ட இருவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வீர சின்னம்பட்டியில் மாந்தோப்பில் தொல்லை செய்த குரங்கை சுட்டு சமைத்து சாப்பிட்ட தொழிலாளி உட்பட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.திண்டுக்கல் வீர சின்னம்பட்டியை சேர்ந்த கேட்டரிங் மாஸ்டர் ராஜாராம் 33. இவருக்கு சொந்தமாக மாந்தோப்பு உள்ளது. இதில் சில தினங்களாக குரங்குகள் புகுந்து மாங்காய் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை நாசம் செய்தது. இதனால் ராஜாராம், தவசிமடை வடுகப்பட்டியைச் சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி ஜெயமணியை சந்தித்து குரங்குகளை கொல்ல வேண்டும் என கூறியுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8r4dvx78&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் ராஜாராம் ரூ.1000 பணம் கொடுத்து தன் தோட்டத்தில் உள்ள குரங்குகளை கொல்ல வேண்டும் என டீல் பேசியுள்ளார். சம்மதித்த ஜெயமணி, தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் குரங்கை சுட்டு கொன்றார். பின்னர் சமைத்து சாப்பிட்டனர். இதை அறிந்த சிறுமலை ரேஞ்சர் மதிவாணன், வானவர் அப்துல் ரகுமான் தலைமையிலான வனத்துறையினர் வடுகபட்டி பகுதியில் உள்ள ஜெமணியை, பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ராஜாராம், பணம் கொடுத்து ஜெயமணியிடம் குரங்குகளை கொல்ல கூறியது தெரிந்தது. வனத்துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து குரங்கு தோல், நாட்டு துப்பாக்கி, வெடி மருந்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பல்லவி
மார் 10, 2025 19:51

குரங்கு mutton சாப்பிட்டால் குரங்கு குணம் தான் வரும்


Kumar Kumzi
மார் 09, 2025 15:28

அநேகமா திருட்டு திராவிஷ கூட்டமா இருக்க கூடும்


RAAJ68
மார் 09, 2025 14:56

பேரு ராஜாராமன் , ‌சாப்பிடுவது குரங்கு கறியா


Kasimani Baskaran
மார் 09, 2025 14:45

அடப்பாவிகளா... புத்திசாலியான குரங்கை கொன்றால் அடுத்த கூட்டம் கூடுதலாக தொல்லை கொடுக்கும் என்பது கூட தெரியாதா...


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 09, 2025 14:29

வீரப்பன் ராஜ்குமாருக்கும், நக்கீரன் கோவாலுக்கும் வாய்க்கு ருசியா வனவிலங்குகளை சமைச்சு கொடுத்தப்ப வீரப்பனை தொட்டுக்கூட பார்க்க முடியலை .....


Apposthalan samlin
மார் 09, 2025 16:56

கண்ணு தெரியாம போச்சு நம்பிக்கை துரோகம் பண்ணி ஜெயலலிதா ஆட்சியில் பிடித்தார்கள் வீரப்பன் இருக்கும் பொழுது தண்ணீர் பிரஜனை வந்தது கிடையாது விடுதலை புலி இருந்த காலத்தில் தமிழ் நாடு மீனவரை தொட்டது கிடையாது .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை