உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடலோர காவல் படையில் புதிதாக இரண்டு விமானங்கள்

கடலோர காவல் படையில் புதிதாக இரண்டு விமானங்கள்

சென்னை : இந்திய கடலோர காவல் படையின் விமான நிலையம், ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், தடையற்ற வான்வெளி கண்காணிப்புக்காக, விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுடன் இயங்குகிறது. இதன் கிழக்கு பகுதி, இரண்டு அதிநவீன 'டோர்னியர் - 228' விமானங்கள் புதிதாக இணைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்த விமானங்கள் கான்பூரில் இருந்து, நேற்று சென்னை வந்தடைந்தன. பாரம்பரிய நீர் பீச்சுதல் முறையில், இரண்டு விமானங்களுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானங்களின் செயல்பாட்டு திறனை கணிசமாக உயர்த்தவும், கடலோர கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணி போன்றவற்றை திறமையான முறையில் செய்ய, இந்த மாற்றங்கள் உதவும். மேம்படுத்தப்பட்ட டோர்னியர் - 28 விமானத்தில், 12.7 எம்.எம்., ஏவி துப்பாக்கி, செயற்கைக் கோள் தகவல் தொடர்பு அமைப்புகள், புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை