உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டூ - வீலரில் சென்ற தம்பதி கார் மோதி பலி; மகள் சீரியஸ்

டூ - வீலரில் சென்ற தம்பதி கார் மோதி பலி; மகள் சீரியஸ்

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே மேலசூரங்குடியைச் சேர்ந்தவர் பத்மநாபன், 62. மனைவி அன்னசெல்வி, 54. இவர்கள் இருவரும் மகள் ராஜசிவநாராயணி, 16, என்பவருடன் முழுப்பந்தல் கோவிலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தனர்.ஆரல்வாய்மொழி அருகே வந்த போது, எதிரே வந்த கார், இவர்கள் பைக் மீது மோதியது. இதில் மூன்று பேரும் துாக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இருவர் மட்டுமே செல்லக் கூடிய வாகனத்தில், மூன்று பேர் பயணித்ததும், ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததால் தான் விபத்தில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பத்மனாபன் முதலில் இறந்தார். நேற்று காலை, அன்னசெல்வி இறந்தார். மகள் ராஜசிவநாராயணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. காரை ஓட்டி வந்த நபர் குறித்து, ஆரல்வாய்மொழி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ