| ADDED : மே 16, 2024 01:13 AM
சென்னை: 'பத்திரப்பதிவு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழக அரசு பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியதால், மக்கள் மீது பொருளாதார சுமை கூடியுள்ளது. ஏற்கனவே மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தற்போது, பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியது ஏற்புடையதல்ல.நில வழிகாட்டி மதிப்பை, 50 சதவீதம் வரை உயர்த்தி வசூலிப்பதும் மக்கள் விரோத போக்காகும். அதாவது, 2017ம் ஆண்டின் வழிகாட்டி மதிப்பையே பின்பற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி, தமிழக அரசு வசூல் செய்வது முறையற்றது.அரசுக்கு வருவாயை பெருக்க, பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்துவது, அரசின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். வழிகாட்டி மதிப்பை உயர்த்தக் கூடாது.இவ்வாறு வாசன் கூறியுள்ளார்.