உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணைந்தால் தான் வெற்றி

பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணைந்தால் தான் வெற்றி

சென்னை:

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:

புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகரன், கே.சி.பழனிசாமி ஆகியோர் எங்கிருந்தாலும் வாழட்டும். சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட எனக்கு, ராமநாதபுரம் மக்கள் 3 லட்சத்துக்கு மேற்பட்ட ஓட்டுகளை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு என் நன்றி. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது தமிழகத்தில் சகஜமாக நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர், அ.தி.மு.க.,வை தொண்டர்கள் இயக்கமாக உருவாக்கினர். பின் மக்கள் இயக்கமாக மாற்றி, 16 ஆண்டுகள் ஆட்சி செய்யும் உரிமையை தமிழக மக்களிடம் இருந்து பெற்றோம். பா.ஜ., கூட்டணி, தமிழகத்தில் நிறைய ஓட்டுகள் பெற்றுள்ளது. அது, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உழைப்புக்கு கிடைத்த வெற்றி.ஏழு தொகுதிகளில் அ.தி.மு.க., 'டிபாசிட்' இழந்தது குறித்து, அக்கட்சியின் தற்காலிக தலைவரிடம் தான் கேட்க வேண்டும். அ.தி.மு.க.,வில் பிரிந்து இருக்கும் சக்திகள் ஒன்றிணையவில்லை எனில், எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Vijay D Ratnam
ஜூன் 11, 2024 14:54

வெற்றியோ தோல்வியோ, இனி அதிமுக எதிரிகளை மட்டும் களத்தில் சந்தித்தால் போதும். கூடவிருந்து குழி பறித்த துரோகிகள் இப்போது அதிமுகவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு விட்டார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அப்படியே அதிமுகவை முழுங்கலாம் என்று வந்து காலை சுற்றிய பாம்பை ஆறு மாதத்துக்கு முன்பே அதிமுக கழட்டி கடாசிவிட்டது. இந்த தடுமாற்றம் காரணமாக பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தடுமாறியது வாஸ்தவம். இனி 2026 சட்டமன்றத்தில் பழைய ஃபோர்ஸோடு வந்து அதிமுக கெத்து காட்டும். அதிமுக தலைவர்கள் இனி மேடைகளில் பேசும்போது பாஜக திமுக கள்ளக்கூட்டணியை மேடையில் கிழித்து தொங்க விடவேண்டும். டீலிங் முடிந்ததால்தான் ஆண்டிமுத்து ராசா, கனிமொழி, தயாநிதி மாறன் இவர்களெல்லாம் கைது செய்யப்படாமல் எஸ்கேப் ஆகும் வேலை செவ்வனே நடக்குதுங்குற விஷயத்தை பொதுக்கூட்ட மேடையில் பேசுங்கள். குற்றவாளி என கோர்ட் அறிவித்த பொன்முடி மகனுக்கும் அமித்ஷா மகனுக்கும் உள்ள பிஸ்னஸ் டீலிங் பற்றி பேசுங்கள். ஏ.வ.வேலு, ஜெகத்ரட்சகன் வீட்டில் அடித்த ரெயிடுக்கெல்லாம் செட்டில்மென்ட் ஆகிவிட்டதா என்று கேளுங்கள். இவிங்களையே ஒன்னியும் பண்ண முடியல.


Jones
ஜூன் 11, 2024 14:30

பிரிந்திருப்பது சக்திகள் அல்ல டம்மி பீஸ்கள்


GMM
ஜூன் 11, 2024 14:10

திமுக, காங்கிரஸ் பிரிய வேண்டும். அல்லது அண்ணா திமுக தொண்டர்கள் பிஜேபியில் இணைய வேண்டும். அண்ணா திமுக எடப்பாடி, பன்னீர், சசி, தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. குறிப்பிட்ட சாதியினர் அனைத்து கட்சியிலும் உள்ளனர். வேறு எந்த சக்தியும் செயல்படாது.


Lion Drsekar
ஜூன் 11, 2024 13:02

வீட்டுக்கு உள்ளே வருவதற்கு தெரிந்தவர்கள் உறவினர்கள் தயங்குவார்கள், வீட்டு உரிமையாளர் சொல்வார், நீங்கள் உள்ளே வாங்க உங்களை எதுவும் செய்யாது என்று, வந்தவர்கள் நினைப்பார்கள் உங்களுக்கு தெரியும் ஆனால் ? வந்தே மாதரம்


Nallavan
ஜூன் 11, 2024 12:40

மத்திய அமைச்சர் பதவி ஆண்டவன் கையில் னு சொன்னாரு. அண்ணனுக்கு எங்கேயும், எதுவும், போனி ஆகல. அதான் மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிக்கிறாரு..


Rajah
ஜூன் 11, 2024 12:16

சில வேளைகளில் தமிழர்கள் பற்றி திராவிடர்கள் சிறியார் சொன்னது உண்மை போல் தெரிகின்றது. தற்போதுள்ள கட்சிகளில் தமிழர்களைக் கொண்டுள்ள கட்சி என்று சொன்னால் அது பெயரைத் தவிர்த்து அதிமுக தான். முதலில் திராவிஷம் என்ற பெயரை மாற்றுங்கள். தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். திராவிடம் என்ற விஷ சொல்லுக்கு பதிலாக தமிழ் என்ற சொல்லை எடுங்கள். அந்த திராவிடம் என்ற இழிவான பெயர் மாறினால் உங்கள் பெயர் நிலைத்திருக்கும்.


Ramesh Sargam
ஜூன் 11, 2024 12:16

இந்த கோழி சேவல் மிக மிக லேஸி கோழி. எல்லோரும் எழுந்தபின் இப்பத்தான் இந்த கோழி எழுந்து கூவுகிறது. கட்சியை அந்த இ பி எஸ்ஸுடன் சண்டைபோட்டு, இன்றும் சண்டைபோட்டுக்கொண்டு உடைத்தபிறகு, இப்பத்தான் இவருக்கு ஞானோதயம் வந்திருக்கிறது. டூ லேட் .....


Apposthalan samlin
ஜூன் 11, 2024 12:13

சசிகலாவையும் தினகரன் சேர்த்தால் ஜாதி வோட் கிடைக்கும்


V. Kanagaraj
ஜூன் 11, 2024 11:53

ஓ.பி.எஸ் நினைப்பது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவில்லை. கட்சிக்கு துரோகம் செய்து வேறு கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் நின்றவர், தன்னை தமிழகத்தின் முதல்வராக ஆக்கிய கட்சியின் அலுவலகத்தை குண்டர் படையுடன் தாக்கி சூரையாடியவர் அதிமுகவை பற்றி பேசுவதற்கு யோகியதை இல்லை.


Kadaparai Mani
ஜூன் 11, 2024 13:24

மிக சரியான கருத்து


r ravichandran
ஜூன் 11, 2024 10:41

பன்னீர்செல்வம் நினைப்பது இனி நடக்காது, எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் இணையும் மன நிலையை தாண்டி சென்று விட்டார், அந்த கட்சியில் இருந்து ஏதாவது பெரிய அளவில் போர் குரல்கள் எழுந்தால் மட்டுமே அதற்கு வாய்ப்பு. அதை விடுத்து தினகரன் கட்சியில் மீதி உள்ளவர்களுடன் இணைந்து விடலாம்,


மேலும் செய்திகள்