உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீட்டில் வழுக்கி விழுந்த வைகோ; தோளில் எலும்பு முறிவு

வீட்டில் வழுக்கி விழுந்த வைகோ; தோளில் எலும்பு முறிவு

சென்னை: ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ நெல்லையில் உள்ள வீட்டில் வழுக்கி விழுந்ததில் அவருக்கு தோளில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து வைகோவின் மகன் துரை, எக்ஸ் சமூகவலைதளத்தில் இத்தகவலை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: எனது தந்தை , கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளர் வெற்றிவேல் மகளின் மணவிழாவில் பங்கேற்பதற்காக, நேற்று (மே-25) திருநெல்வேலி சென்று இருந்தார். இரவு, வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் இதனால் அவர் சென்னைக்கு செல்ல உள்ளார். தந்தை விரைவில் நலம் பெறுவார். அச்சம் கொள்ளும் வகையில் எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

INDIAN Kumar
மே 29, 2024 17:58

நல்ல போராளி திமுகவில் கூட்டணி வைத்ததை அவராலே ஏற்று கொள்ள முடியவில்லை நலம் பெற வாழ்த்துக்கள்


Vijay D Ratnam
மே 29, 2024 16:05

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். இந்தியாவின் 40 சதவிகித தாமிர தேவையை பூர்த்தி செய்துக்கொண்டு இருந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடி ஒரு லட்சம் குடும்பத்தின் சோற்றில் நிரந்தரமாக மண் அள்ளிப்போட்ட பாவத்தின் பலனை அனுபவித்துத்தான் ஆகோணும். இந்த பெட்டி வாங்கி பொழப்பு நடத்தும் தமிழ்நாட்டு அரசியல் விஷ கிருமிகள். இன்று இந்தியாவின் தாமிர தேவைக்கு சீனாவை எதிர்பார்க்கும் நிலைக்கு கொண்டு வந்ததற்கும் சீனாவிடம் இருந்து இந்த கிருமிகளுக்கு பெட்டி வந்திருக்கும்.


S Ramkumar
மே 29, 2024 15:40

விரைவில் குணம் அடைய வாழத்துக்கள்.


S Ramkumar
மே 29, 2024 15:40

சரியான பாதையில் பயணிக்க மறந்த அரசியல்வாதி.


kumarappan
மே 28, 2024 18:16

my political hero but now sorry before 35 years bur good man as faster recovery from injuries


nizamudin
மே 28, 2024 08:50

வைகோ அவர்கள் நலம் பெற்று வர பிரார்த்தனை


vns
மே 28, 2024 02:03

இதுவரையில் செய்த புரட்சிகள் போதும். இனி தமிழ் மக்களுக்காக ஓய்வெடுங்கள். போதும் பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றியது.


Natchimuthu Chithiraisamy
மே 27, 2024 19:24

ஈரோட்டு காரர் சாபம் மற்றும் பேயாக தாக்கியுள்ளார்


DUBAI- Kovai Kalyana Raman
மே 27, 2024 15:54

திருநெல்வேலி வீடு , சென்னை வீடு, சொந்த ஊருல வீடு , மதுரை ல வீடு , கோவில்பட்டி ல வீடு ..ITC கம்பெனி யோட தமிழ்நாடு ஏஜென்ட் சிகரேட்ஸ் ,biscuites , agency , யாருக்கும் தெரியாத எத்தின யோ பிசினஸ், தமிழ்நாட்டின் மிலியினீர் ல இவரும் ஒருவர் ..அம்பானி , அதானி , மாறன் வரிசைல ..இவரும் ஒருவர் , ஆனாள் , ஊருக்கு உத்தமர் வேஷம்


Kasimani Baskaran
மே 27, 2024 12:27

நலம் பெற வாழ்த்துகள்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ