உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சித்ரா பவுர்ணமிக்கு வி.ஐ.பி., கடிதம் திருவண்ணாமலையில் அனுமதியில்லை

சித்ரா பவுர்ணமிக்கு வி.ஐ.பி., கடிதம் திருவண்ணாமலையில் அனுமதியில்லை

திருவண்ணாமலை:திருவண்ணாமலையிலுள்ள மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். இதனால், பவுர்ணமி தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்களும், மற்ற நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்கின்றனர். இதில், சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீப திருவிழா மற்றும் கார்த்திகை மாத பவுர்ணமியின் போது, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர்.அவ்வாறு, இந்தாண்டு சித்ரா பவுர்ணமி திதி வரும், 23ம் தேதி அதிகாலை, 4:21 மணி முதல், மறுநாள் அதிகாலை, 5:54 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் செல்ல கோவில் மற்றும் நகருக்கு வருவர்.அவ்வாறு வரும் பக்தர்களுக்கு, முன்னேற்பாடு செய்வது குறித்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில், அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன:கிழக்கு ராஜகோபுரம் வழியாக, பக்தர்கள் கோவிலில் அனுமதிக்கப்பட்டு, தெற்கு திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர். முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படுகிறது.கோடைக் காலம் என்பதால், கோபுர நுழைவாயிலில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய செல்ல, கருவறை வரை உள்ள நடைபாதையில், நிழற்கூடை மற்றும் தேங்காய் நார் தரைவிரிப்பான் அமைத்தல், தரையில் வெள்ளை கூல் பெயின்ட் அடித்தல் போன்றவை மேற்கொள்ளப்படும். கிரிவலப்பாதையில், 3 இடங்களில் இளைப்பாறும் கூடம் அமைக்க வேண்டும்.இவ்வாறு பல முடிவுகள் எடுக்கப்பட்டன.கூட்டத்தில், அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் அறங்காவல் குழு தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை