உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெயில் கொடுமையால் ஓட்டளிக்க சென்ற முதியவர்கள் உயிரிழப்பு: அறிக்கை கேட்கிறது ஆணையம்

வெயில் கொடுமையால் ஓட்டளிக்க சென்ற முதியவர்கள் உயிரிழப்பு: அறிக்கை கேட்கிறது ஆணையம்

சென்னை: சேலத்தில் ஓட்டளிக்க சென்ற முதியவர்கள் மூன்று பேர், வெயில் தாங்க முடியாமல் உயிரிழந்தது தொடர்பாக அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டு உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொண்டையம்பள்ளியை சேர்ந்த ரங்கசாமி மனைவி சின்னபொன்னு (77). இவர், செந்தாரப்பட்டியில் உள்ள ஓட்டு சாவடியில் மை வைத்துக் கொண்டு, ஓட்டளிக்க சென்ற போது ஓட்டுச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=my3pm69v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தம்மம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் சூரமங்கலத்தில் 65 வயதான பழனிசாமி என்ற முதியவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோல் திருத்தணியிலும் ஒரு முதியவர் ஓட்டளிக்க வரிசையில் நின்றிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.இது தொடர்பாக சத்யபிரதா சாஹூ கூறுகையில், முதியவர்கள் உயிரிழப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளோம் என்றார்.முன்னதாக சத்யபிரதா சாஹூ கூறுகையில், இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் ஆர்வமாக இருப்பதால் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகமாக இருக்கும். தமிழகத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும். அனைத்து இடங்களிலும் நல்லபடியாக ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. 4 இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்புசாமி
ஏப் 20, 2024 08:00

உச்சி வெயில் மண்டையப் பொளக்குது.


M Ramachandran
ஏப் 19, 2024 18:54

முதியவர்களுக்கு தனியாகவோ முன்னுருரிமைய கொடுத்தோ ஓட்டளிக்க செய்தல் அவர்கள் அதிக நேரம் வரிசையில் நிற்க தேவயில்லை


அப்புசாமி
ஏப் 19, 2024 17:33

கோயமுத்தூர்ல லட்சம் வாக்காளர்கள் பேரைக் காணோமாம். அண்ணாமலை சொல்றாரு. யார் கிட்டே கேக்கிறதாம்?


Kasimani Baskaran
ஏப் 19, 2024 16:43

தண்ணீர் கூட ஒழுங்காக ஏற்பாடு செய்யாமல் வளர்ந்த மாநிலம் என்று உருட்டுவது அக்கிரமம்


Kavin Kazhugaar
ஏப் 19, 2024 12:52

அண்ணா பள்ளி பெசன்ட் நகரில் முதியவர்களுக்கு தனியாக வோட்டு போட வசதி இல்லாமல் மிகவும் அவதி பட்டார்கள் பிறகு யாரோ ஒருவர் சத்தம் போட்ட உடன் மாற்றினார்கள்


கனோஜ் ஆங்ரே
ஏப் 19, 2024 11:48

அய்யா இது தமிழ்நாடு நல்லமுறையில்தான் நடக்கும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பீஹாரில் வாக்குச்சாவடியில் கொள்ளையர்கள் வெடிகுண்டு எரிந்து வந்து கைப்பற்றிய போதுகூட தமிழ்நாட்டில் சிறு வன்முறைகூட இல்லாமல் அமைதியாகத்தான் தேர்தல் நடந்தது இன்றும் அதுபோலத்தான் நடக்கும் தமிழ்நாடு என்பது புலிகளும், சிறுத்தைகளும், சிங்கங்களும் உலவும் அமைதியான நாடு அவற்றை சீண்டாத வரை அதுகள் அமைதியாகத்தான் உலா வரும் சீண்டுனானுங்கன்னா “ஜல்லிக்கட்டு” மாதிரிதான் பொங்கி எழும் தமிழன்யா?


NicoleThomson
ஏப் 19, 2024 12:38

நம்பிட்டோம் , சர்வாதிகாரி யாலும் மாநிலத்தில் எல்லாம் வயிறு மாத்திரம் எரியும், வெளியே தெரியாது அல்லவா?


ஆரூர் ரங்
ஏப் 19, 2024 15:50

ஸ்டாலின் மேயராக முயற்சித்த மாநகராட்சி தேர்தலில் முறைகேடு காரணமாக திமுக அரசே மறுதேர்தல் நடத்தியது.


Nagarajan D
ஏப் 19, 2024 10:52

உண்மையாகவே தேர்தல் அதிகாரிகளின் முனைப்பு பாராட்டப்பட வேண்டிய அளவில் உள்ளது நான் வயது வாக்காளர் இதுவரை ஒருமுறை கூட தவறாமல் வாக்களித்தவன் வெயில் கொடுமையை குறைக்க ஷாமியானா போட்டு மோர் ஏற்பாடு செய்து எல்லா வாக்குசாவடியிலும் தண்ணீர் வைத்து சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்துள்ளார்கள் இதுவரை இப்படி முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதில்லை எனது பாராட்டுகள்


T.S.SUDARSAN
ஏப் 19, 2024 09:58

நான் இன்று காலை ஓட்டுபதிவிற்கு சென்றபோது உங்கள் நோ என்ன என்று கேட்டு பூத் ஸ்லிப் வாங்கிவரும்படி அங்கு இருந்த புல்லிங் ஏஜென்ட் கூறினார் அதையே பூலிங் ஆஃபீசரும் கூறினார் அனல் நான் என்னோடு பழைய நினைவில் கூற என்று கூறினேன் அந்த போனதடவை போடப்போது நினைவு ஆனால் அதற்கு முன்னால் போட்டபோது என்று நினைவு இந்த தவறை சரி செய்ய பூத் ஸ்லிப் தேவை இல்லை பெர்மனண்டாக ஆதார், வோட்டர்ஸ் ஐடென்டிபிகேஷன், ரேஷன் கார்டு மற்றும் பேங்க் ஐடென்டிபிகேஷனில் ஒரு பெர்மனெண்ட் நம்பர் கொடுத்து விட்டால் எங்கேயும் தவறு நடக்காது இதை தான் மேலை நாடுகளில் கடைபிடிக்கிறார்கள் இதேயையே நாமும் கடைபிடித்தால் எந்த தவறும் நடைபெற வாய்ப்பில்லை அங்கே நம் பணத்தை யாரும் கொள்ளை அடிக்கமுடியாது செய்வார்களா


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ