உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொறுத்திருந்து பாருங்கள் கூறுகிறார் பன்னீர்செல்வம்

பொறுத்திருந்து பாருங்கள் கூறுகிறார் பன்னீர்செல்வம்

திருப்பரங்குன்றம்:மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வரும், ராமநாதபுரம் லோக்சபா பா.ஜ., கூட்டணி சுயேச்சை வேட்பாளருமான பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:பிரதமர் மோடி பத்தாண்டு சிறப்பாக ஆட்சி செய்தார். அவரது ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அனைத்து பிரிவைச் சேர்ந்த மக்களும் நல்ல வரவேற்பு அளித்தனர்.என் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஓட்டுப்பதிவு சதவீதத்தில் ஏற்பட்ட குளறுபடி எப்போதும் வரத் தான் செய்யும். வர வர திருத்தம் செய்து அறிவிப்பர்.இவ்வாறு அவர் கூறினார். அ.தி.மு.க.,வை மீட்பது குறித்த கேள்விக்கு, ''பொறுத்திருந்து பாருங்கள்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி