உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கு பதிவு கட்டண விலக்கு

அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கு பதிவு கட்டண விலக்கு

சென்னை: அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கையை ஊக்குவிக்கும் விதமாக, ஆகஸ்ட், 15 வரை பதிவு செய்யும் நபர்களுக்கு, பதிவு கட்டணம் 200 ரூபாய் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: புலம் பெயர்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வசிக்கும், தமிழர்களின் நலன் காக்க, தமிழக அரசு சார்பில், 'அயலகத் தமிழர் நல வாரியம்' அமைக்கப்பட்டுள்ளது.இதன் வழியே, வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. வாரியத்தில், 18 வயது முதல் 55 வயது வரை உள்ள அயலகத் தமிழர்கள், https://nrtamils.tn.gov.inஇணையதளத்தில், 200 ரூபாய் கட்டணம் செலுத்தி, உறுப்பினராக சேரலாம்.உறுப்பினர் பதிவை ஊக்குவிக்கும் விதமாக, இம்மாதம் 15ம் தேதி முதல் ஆக., 15 வரை பதிவு செய்வோருக்கு, பதிவு கட்டணம், 200 ரூபாய் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.வாரிய உறுப்பினர்களுக்கு விபத்து காப்பீடு, தீவிர மற்றும் தொடர் சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான காப்பீடு, கல்வி உதவித்தொகை திட்டம், திருமண உதவித்தொகை திட்டம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி