உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடக்கு முறையை கண்டு அஞ்ச மாட்டோம்: ஆர்ப்பாட்டத்தில் இ.பி.எஸ்., பேச்சு

அடக்கு முறையை கண்டு அஞ்ச மாட்டோம்: ஆர்ப்பாட்டத்தில் இ.பி.எஸ்., பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள்ளக்குறிச்சி: 'திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. அடக்கு முறையை கண்டு அஞ்ச மாட்டோம்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறியதாக, தமிழக அரசைக் கண்டித்து கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. அப்போது இ.பி.எஸ்., பேசியதாவது: உயர் அதிகாரிகளுடன் பலமுறை கூட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலின் கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிவிட்டார். ஏழைகளை பற்றி அரசுக்கு கவலையில்லை. நகரின் மையப்பகுதியில் அரசின் ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயம் விற்பனை செய்ய முடியாது. அடக்கு முறையை கண்டு அஞ்ச மாட்டோம்.

பொறுப்பு தமிழக அரசு தான்

கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும். 58 மரணங்களுக்கும் பொறுப்பு தமிழக அரசு தான். காற்றை எப்படி தடை செய்ய முடியாதோ, அதுபோல மக்களின் உணர்வுகளை தடை செய்ய முடியாது. மக்களுக்கு நீதி கேட்பதில் என்ன தவறு. போராட்டத்தை முடக்க முயன்றாலும், அஞ்ச மாட்டோம். திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.

ஆறாய் ஓடும் கள்ளச்சாராயம்

அதிகாரத்தை வைத்துக்கொண்டு தி.மு.க.,வினர் அதிகாரிகளை ஆட்டிப்படைக்கிறார்கள். அ.தி.மு.க.,வின் ஆர்ப்பாட்டத்திற்கு மேடை அமைக்கக்கூட இடையூறு செய்தார்கள். தற்காலிக மேடையில் இப்போது நிற்கிறேன். மாவட்ட கலெக்டர் பொய் கூறியதால், கள்ளச்சாராயம் குடித்தவர் பலர் சிகிச்சைக்கு வராமல் உயிரிழந்தனர். தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுகிறது. இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

P. SRINIVASALU
ஜூன் 24, 2024 16:17

இது ஒரு காமடி


thamilakam
ஜூன் 24, 2024 15:45

pulla poochi Kellam kodukku mulaikkum nu kanavaada kandean


மோகனசுந்தரம்
ஜூன் 24, 2024 13:49

இந்தக் கண்றாவி பிடிச்சவர் மட்டும் கூட்டணிகளோடு அனுசரித்து போய் இருந்தால் இந்தத் திருட்டு திராவிட அயோக்கிய திமுக கட்சி ஆட்சிக்கு வந்திருக்குமா. முடிந்த அளவிற்கு அயோக்கியத்தனம் செய்துவிட்டு இன்று மீட்டிங், மண்ணாங்கட்டியாம்.


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 24, 2024 20:50

சரியாக சொன்னேர்கள். அதிமுக வில் இருக்கும் தொண்டர்களுக்கு கீழ்மட்ட தலைவர்களுக்கு இது தெரியவில்லையே.


Ms Mahadevan Mahadevan
ஜூன் 24, 2024 13:36

கட்சிகாரர்களை கண்டு பயப்படவே நேரம் போதவில்லை. அதனால்தான் வேறொன்றும் இல்லை


செந்தமிழ் கார்த்திக்
ஜூன் 24, 2024 12:50

இறந்த 58, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு நீதி வேண்டுமாம். எல்லாம் கால கொடுமை. அப்பாவியாக இருக்கும் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் இரக்க மனதுடன் பத்து லட்சம் கொடுக்கிறது திமுக அரசு. இன்றும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மற்றவர்கள் குணமான பிறகு அவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். விஷ சாராயம் இனி எங்குமே தமிழ்நாட்டில் இல்லாதவாறு அடியோடு ஒழிக்க திமுக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் செய்ய வேற காரணம் கிடைக்கவில்லை ஆகையால் இன்னும் பத்து நாட்களுக்கு இதையே தான் பேசுவார்கள்.


ஆயில்யராணி
ஜூன் 24, 2024 12:44

தமிழ்நாடு ஸ்காட்லாந்து யார்டு சிரிப்பு போலூஸ் கொடநாடு கொலை, கொள்ளை பற்றி எதுவுமே கண்டுபிடிக்க முடியாது. அடக்குமுறையாவது புண்ணாக்காவது.


MADHAVAN
ஜூன் 24, 2024 12:33

இப்போ பொங்கு பொங்குனு பொங்குறதுக்கு பதில் உன் ஆட்சில பொங்கியிருந்தா பரவாயில்ல, அப்போ வாய மூடிக்கொன்டு மக்களுக்கு கெடுதல் செஞ்ச எடபடிக்கு இது அதிகம்தான்


MADHAVAN
ஜூன் 24, 2024 12:30

2020 உங்க ஆட்சில விழுப்புரத்தில் 20 பேரு கல்லசராயம் குடித்து செத்தபோது நீங்க சொன்னது மறந்துபோச்சா ? 2022 ல குஜராத்துல 68 பேரு கள்ளச்சாராயம் குடிச்சு செத்தபோது அண்ணாமலை சொன்னது மறந்துபோச்சா ?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை