உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மணல் அள்ளுவதை போட்டு கொடுத்தால் மாதம் 1000 ரூபாய் தரமாட்டோம்! கலெக்டரிடம் விவசாயிகள் புகார்

மணல் அள்ளுவதை போட்டு கொடுத்தால் மாதம் 1000 ரூபாய் தரமாட்டோம்! கலெக்டரிடம் விவசாயிகள் புகார்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு குடமுருட்டி ஆற்றில், கண்டியூர் முதல் திருச்சோற்றுத்துறை வரை, கோணக்கடுங்கலார் பராமரிப்பு பணிக்காக மணல் அள்ளிக்கொள்ள வருவாய்த்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் கான்ட்ராக்டருக்கு அனுமதித்து உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் பலமுறை மனு அளித்தும் எந்த பயனும் இல்லை என தெரிவித்தனர். இந்நிலையில், கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம், குடமுருட்டி ஆறு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று மனு அளித்தனர்.இதுகுறித்து குடமுருட்டி ஆறு பாசன விவசாயிகள் சங்க செயலர் சீனிவாசன், நிருபர்களிடம் கூறியதாவது:குடமுருட்டி ஆற்றில் இருந்து ரெட்டை கோவில், திருவேதுகுடி, ஆலங்குடி, கல்யாணி ஆகிய வாய்க்கால்கள் வாயிலாக, 2,500 ஏக்கர் பாசன வதி பெறுகிறது.இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் கோணக்கடுங்கலாறு தடுப்புச்சுவர் கட்டும் பணிக்காக என கூறி, குடமுருட்டி ஆற்றில் மணலை எடுத்து வருவதால், வாய்க்காலை விட ஆறு பள்ளமாகி விட்டது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் வருவது சிரமமாக உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தினால் ஒரு மாதம் மணல் அள்ளுவதை நிறுத்துவர்; மீண்டும் மணல் அள்ளுவது தொடரும். பொதுமக்கள் எதிர்ப்பால் பகலில் அள்ளுவதை விட்டு, இரவில் அள்ளுகின்றனர். மேலும், கண்டியூர் பாலம் முதல் கிழக்கே, 400 மீட்டர் வரை ஆற்றின் தெற்கு பகுதியில் பாதை அமைத்து, மணல் அள்ளி வருகின்றனர். இது குறித்து எங்கள் கிராம பஞ்சாயத்து தலைவர் அதிகாரிகளிடம் மனு அளித்த போது, நிதியை நிறுத்தி விடுவோம் என மிரட்டினர். குறிப்பாக, மகளிர் உரிமை தொகை 1,000 ரூபாய், நுாறு நாள் பணிகள் கிடைக்காது என மிரட்டுகின்றனர். மிரட்டல் தொடர்கதையாகி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Rajagopalan R
ஜூலை 25, 2024 02:28

கலெக்டர் நல்லா இருப்பது பிடிக்கள்ளியா மாட்டிவிட பார்க்கிறாயே


Rajagopalan R
ஜூலை 25, 2024 02:26

கலெக்டர் நல்ல இருப்பது பிடிக்கள்ளியா .வம்பில் மாட்டிவிட பார்க்கிறாய் போர்


Mani . V
ஜூலை 24, 2024 17:00

இதெல்லாம் என்ன அயோக்கியத்தனம்


Rajendran Sundram
ஜூலை 24, 2024 16:14

அட ஆமாங்க உண்மை தான்.. பணம் கிடைக்காது.. மணலை விற்று தான் உங்களுக்கு 1000 ரூபா.. டாஸ்மாக் சாராயம். ஓட்டுக்கு 5000 முதல் 10000 வரை கொடுக்கிறோம்.. அண்ணண் ஸ்டாலின் குடும்பம் வாழ்க...


Mohan Kumar
ஜூலை 24, 2024 15:18

மணலலளுவதை.கலெக்டர்.தடுக்கவேண்டும்


Mohan Kumar
ஜூலை 24, 2024 15:14

Manal.. alluvathai.. thadukkanum.. collector thadukkanum


Santhan Santhappan
ஜூலை 24, 2024 13:25

எவன் ஆட்சி செய்தாலும் மணல் கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கும்


Mariappasamy
ஜூலை 23, 2024 22:29

தென்காசி மாவட்டம் சுரண்டை சுற்று வட்டார பகுதிகளில் SPN மணல் மற்றும் கல் குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு மிகப்பெரிய டாரஸ் வண்டிகள் மூலமாக கடத்தப்படுகிறது.திமுக ஆட்சி என்பதால் காங்கிரஸ் எம்எல்ஏ வான இவர் பகிரங்க திருட்டில் இறங்கி உள்ளார் இவரை எதிர்த்து கேள்வி கேட்க எந்த சட்டமோ மீடியாவோ இல்லை . இவர்கள் திருடுவதற்கு முதல் காரணம் மீடியா விலை போவதுதான் முடிந்தால் களத்தில் இறங்கி இவர்கள் நாட்டு மக்களுக்கு செய்யும்துரோகத்தை வெளிஉலகிற்கு கொண்டு வாருங்கள்


vijay
ஜூலை 23, 2024 17:44

மக்களே இப்போதாவது திருந்துங்களேன். வாய்ப்பு கிடைச்சாலும் திருந்தாமல், அன்பளிப்பாக கொலுசு, பணம் கிடைச்சவுடன் மீண்டும் விடியாத கட்சிக்கே வோட்டு போடறீங்க. என்னதான் சொல்வது?. முடியலப்பா முடியல


s chandrasekar
ஜூலை 23, 2024 14:07

பேசாமல் இருங்க பிஜேபி தமிழ்நாட்டில் நுளைந்து விடும் .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை