உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 30 அமைச்சருக்கு என்ன வேலை?: காடேஸ்வரா சுப்பிரமணியம்

30 அமைச்சருக்கு என்ன வேலை?: காடேஸ்வரா சுப்பிரமணியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பல்லடம்: ''ஒரு சட்டசபை தொகுதியில், 30 அமைச்சர்களுக்கு என்ன வேலை?'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.திருப்பூர் மாவட்டம், பல்லடம், ராயர்பாளையத்தில் நடந்த ஹிந்து முன்னணி ஊழியர் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது:தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான ஆட்சி நடந்து வருகிறது. ஹிந்துக்களை இழிவுபடுத்துபவர்களை தான், நாம் மீண்டும் ஆட்சியில் அமர வைக்கிறோம். இந்நிலை மாற வேண்டும்.ஒரு சட்டசபை தொகுதியில், 30 அமைச்சர்களுக்கு என்ன வேலை? கோடிக்கணக்கில் செலவழித்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ., சும்மாவா இருக்கப் போகிறார்? தேர்தலில் செலவு செய்த பணத்துக்காக மீண்டும் வருமானம் ஈட்டத்தான் பார்ப்பார்.மக்கள் சரியானவர்களை தேர்ந்தெடுக்க, அவர்களை வழிநடத்திச் செல்ல வேண்டியது ஹிந்து முன்னணியின் பொறுப்பு. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

வைகுண்டேஸ்வரன்
ஜூலை 15, 2024 12:34

18 ஆண்டுகளாக நடக்காமல் இருந்த சிவகங்கை ஸ்வர்ணமுர்த்தீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவை சிறப்பாக, சென்ற வாரம் நடத்தியவர் முதல்வர் ஸ்டாலின். இவரது அரசு எப்படி இந்து விரோத அரசு என்கிறீர்கள்?????


ஆரூர் ரங்
ஜூலை 15, 2024 12:59

அது கோர்ட் கண்டனத்தால் நடத்தப்பட்டது ..மற்றபடி கோயில் விழாவுக்கும் ஹிந்து சனாதானத்தை இழிவு படுத்தும் திமுக வுக்கும் தொடர்பில்லை.


vadivelu
ஜூலை 15, 2024 13:57

கோவில்களை லாபம் ஈட்டும் வியாபார தலங்களாக மாற்றி விட்டனர். அறநிலையத்துறை கோவில்களுக்கு, கடந்த ஆட்சியில் ஆண்டுதோறும் நிர்வாக வரி என, 420 கோடி, ஆடிட் வரி என, 127 கோடி ரூபாய் வசூல் செய்தனர். இந்த அரசு, நிர்வாக வரி, 428 கோடி ரூபாய், ஆடிட் வரி, 228 கோடி ரூபாய் என, 656 கோடி ரூபாய் வரி வசூல் செய்கிறது. பொன் மாணிக்கவேல்


Sivak
ஜூலை 15, 2024 14:47

பெயர் வைகுண்டேஸ்வரன்.. ஈசனின் அருமையான திருப்பெயர்... நீங்கள் ஹிந்து மதத்தை அழிக்க நினைக்கும் திருட்டு கூட்டத்தை.. கடவுள் ஹிந்து கடவுள் மட்டும் மறுப்பாளர்களை தூக்கி பிடிப்பது வருத்தம் அளிக்கிறது .... ஏதாவது ஒரு முஸ்லீம் .. தன் மத கடவுளை இழிவாக பேசினால் அழிக்க நினைத்தால் அதற்க்கு முட்டு குடுக்கிறானா என்று பாருங்கள் .... ஹிந்துக்கள் ஹிந்துக்களால் அழிக்க படுகிறார்கள் ...


வைகுண்டேஸ்வரன்
ஜூலை 15, 2024 12:31

8 முறை பிரதமருக்கு, தமிழ் நாட்டில் என்ன வேலை என்று, பாராளுமன்ற தேர்தலின் போது ஏன் கேட்கவில்லை? காபந்து அரசின் பிரதமருக்கு அயோத்தியில் 9 நாட்கள் என்ன வேலை என்று கேட்டீர்களா? 28 ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா தொகுதியில் 3 நாட்கள் தங்கி பரப்புரை செய்யவில்லையா? தேர்தல் என்றால் பரப்புரை செய்வார்கள் தான். இதில் என்ன கேள்வி வேண்டிக்கிடக்கு??


தஞ்சை மன்னர்
ஜூலை 15, 2024 11:42

நம்ம 242 எம்பிக்கள் என்ன பண்ணுவாங்களா அதையைத்தான் இவர்களும் செய்வார்கள் அவன் மிக்சர் சாப்பிட்ட இவங்களும் சாப்பிடுவாங்க


Narayanan Muthu
ஜூலை 15, 2024 11:31

தமிழக அமைச்சர்களாவது அவரவர் துறை செயல்பாட்டின் மூலம் மக்களுக்கு தெரிய வருகிறார்கள். ஒன்றிய அரசில் பெரும்பான்மை அமைச்சர்கள் யார் என்றே மக்களுக்கு தெரியாத வகையில் அவர்களின் செயல்பாடு உள்ளது. இந்த லட்சணத்தில் இந்த கரடி இங்கு கூப்பாடு போடுது.


MADHAVAN
ஜூலை 15, 2024 10:57

5 வருஷம் தமிழகத்துக்கு சரியா வாராத மோடி, எலெக்சன் வந்தவுடன் ஏரோபிளேன் எலிகாப்டருன்னு எடுத்துக்கிட்டு தமிழ்நாடுக்கு வந்தபோது நீ என்ன கோமாவில் இரூந்தியா ?


Mario
ஜூலை 15, 2024 09:39

மோடி தமிழ்நாட்டுக்கு 8 முறை வந்து தோத்தாரே, அத பத்தி பேசலாமா


ராமகிருஷ்ணன்
ஜூலை 15, 2024 09:21

30 அமைச்சர்களும் 5 வருஷமும் சுருட்டி சுருட்டி, தலைமை குடும்பத்தினருக்கு கொடுத்து விட்டு தாங்களும் 30 தலைமுறைக்கு சொத்துக்கள் சேர்ப்பது என்று பிசியாக இருக்கிறார்கள்.


V RAMASWAMY
ஜூலை 15, 2024 09:12

யார் என்ன கரடியாகக் கத்தினாலும் மூளையில்லா வாக்காளர்கள் ஒரு பொட்டலம் பிரியாணிக்கும், ஒரு பாட்டளிக்கும், ஒரு வாரத்திற்கும் போதாதா ஒரு சிறு துகைக்கும் ஆசைப்பட்டு தங்கள் ஐந்து ஆண்டு வாழ்வை எதிர்காலத்தை நாசமாக்கிக்கொள்ளும் தமிழத்தில் மட்டும்தான் இருக்கிறது. இவ்வளவு மூளை கெட்டுப்போய்விட்டார்களே என்கிற ஆதங்கம் எவர்க்கும் உள்ளது. எப்படிப்பட்ட தமிழகம் இப்படி நாசமாகிவிட்டதே.


Sampath Kumar
ஜூலை 15, 2024 08:30

வயிறு எரிச்சலின் வெளிப்பாடுதான் உன் புலம்பல்


venugopal s
ஜூலை 15, 2024 08:20

ஒரு நாட்டின் பிரதமர் மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் செலவு செய்து ஒரே மாநிலத்துக்கு ஏழு தடவை பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு வந்த போது இவருக்கு இதே கேள்வியை கேட்கத் தோணவில்லையா?


Svs Yaadum oore
ஜூலை 15, 2024 09:14

பிரதமர் குஜராத் மாநிலம்.. உத்தர பிரதேசம் பீகார் போன்றவை மிகவும் பின்தங்கிய மாநிலம் ....அங்கெல்லாம் படிப்பறிவு பட்டறிவு அதிகம் கிடையாது ....தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலம் ...அதனால்தான் விடியல் முதல்வர் சொகுசு தனி விமானத்தில் குடும்பத்துடன் வளைகுடாவில் சுற்றுலா ....


ராமகிருஷ்ணன்
ஜூலை 15, 2024 09:24

7 தடவை வந்தும் மடத்தமிழன் குவாட்டர், பிரியாணி, 500 ரூபாய் பணம் இதற்கு தானே ஓட்டு போட்டான் கள்.


மேலும் செய்திகள்