உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தெப்ப குளங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறநிலைய துறைக்கு ஐகோர்ட் கேள்வி

தெப்ப குளங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறநிலைய துறைக்கு ஐகோர்ட் கேள்வி

மதுரை:தமிழக கோவில்களிலுள்ள தெப்பக்குளங்களை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.இந்திய மருத்துவ நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜெயவெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:பல கோவில்களில் தெப்பக்குளங்களை சுற்றிலும் வேலி அமைக்காமல் பராமரிப்பின்றி உள்ளன.தென் மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டம் திருமலைக்கேணி தண்டாயுதபாணிசுவாமி கோவில், காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோவில், உப்பூர் வெயிலுகந்த விநாயகர் உள்ளிட்ட 27 கோவில்களிலுள்ள தெப்பக்குளங்களில் தடுப்புச்சுவர்கள் சேதமடைந்துள்ளன. சரிவர பராமரிக்கப்படவில்லை.இவற்றை பாதுகாக்க வேண்டிய கடமை, அறநிலையத்துறைக்கு உள்ளது. எனவே, தென் மாவட்ட கோவில்களின் தெப்ப குளங்களை துார்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.அந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கோவில் தெப்பக்குளங்களை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, அறநிலையத்துறை கமிஷனர், அக்., 1ல் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kumaresan
செப் 05, 2024 11:19

மதுரை பெரியார் பஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவிலின் திருக்குளம் முழுவதுமாக ஆகிரமிப்புகளால் மறைக்கப்பட்டுள்ளது . அங்கு வேலை செய்யும் அர்ச்சகர்களும் இதைப்பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை . முதலில் கோவில் குளம் , விருக்ஷத்தை கண்டுபிடித்து அத்திருக்குளத்தை மீட்டெடுக்க தினமலர் சேவை நம்பியிருக்கிரோம் . நன்றி


Mani . V
செப் 05, 2024 05:59

சாரே ஏரியை ஆக்கிரமிப்பு செய்துதான் இந்த நீதிமன்றத் கிளை கட்டப்பட்டுள்ளது. முதலில் அந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடுங்கள்.


சமீபத்திய செய்தி