உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதி மறுப்பு திருமணத்தை ஏற்கும் காலம் எப்பொழுது வரும்?: சிறப்பு விவாதம்

ஜாதி மறுப்பு திருமணத்தை ஏற்கும் காலம் எப்பொழுது வரும்?: சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில்

6 ஆண்டு காதல் ஜோடிக்கு ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால், திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நுழைந்து பெண் வீட்டார் அடித்து சூறையாடினர். இந்நிலையில், கலப்பு திருமணத்தை ஏற்க காலம் மாறுவது எப்போது? என்பது குறித்து விவாதம் நடந்தது.

வீடியோவை காணுங்கள்!

இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.https://www.youtube.com/watch?v=irwEFteyCIA


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
ஜூன் 16, 2024 13:38

சாதிப் பெயரை கம்யூனிஸ்டு தலைவர்களே கைவிடவில்லை. மற்றவர்களுக்கு உபதேசம் ஏன்?


SIVA
ஜூன் 16, 2024 13:32

தாக்குதல் நடைபெற்றது முற்றிலும் தவறு, அவர்களுக்கு சட்டத்தின் மீது பயம் இல்லை, என்னோவா இந்துக்கள் எல்லாவரும் ஜாதி வெறி பிடித்தவர்கள் போலவும் ஜாதி கலப்பு திருமணம் நடந்தாலே கலவரம் நடப்பது போல் சிலர் பேசுவது தவறு, கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் எத்தனை கலப்பு திருமணம் செய்து உள்ளனர், இந்து முஸ்லீம், இந்து கிறிஸ்டின் அல்லது இந்துவில் ஜாதி கலப்பு திருமணங்கள் மட்டுமே அதிக அளவில் நடை பெற்று உள்ளன, கிறிஸ்டின் முஸ்லீம் கலப்பு திருமணம் எனக்கு தெரிந்து நான் ஒரு திருமணம் பார்த்து உள்ளேன் , கிறிஸ்டின் முஸ்லீம் எத்தனை நடை பெற்று உள்ளன என்று வெற்று மதசார்பினமை பேசும் அரசியல் வியாதிகள் மற்றும் பக்குவமாய் எழுதும் மீடியாக்கள் விவாதம் நடத்துங்கள், கோர்ட் உத்தரவு என்ற பெயரில் எத்தணை கோயில்கள் இடிக்கப்பட்டு உள்ளன, ஆனால் இங்கு கோயம்பேட்டில் ஒரு மசூதியை அகற்ற உச்ச நீதி மன்றம் உத்தரவு இருந்தும் அரசால் கிட்ட நெருங்க முடியவில்லை , அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ மைக் கூட பிடுங்க முடியவில்லை ........


தமிழ்வேள்
ஜூன் 16, 2024 13:05

ஜாதி என்பது ஒரு குறிப்பிட்ட தன்மை கொண்ட பழக்க வழக்கம் வாழ்க்கை வழிபாட்டு முறைகள் கொண்ட குடும்பங்களின் தொகுப்பு.... அவர்கள் வாழ்க்கை முறை பண்பாடு வழிபாடு சார்ந்த வேறுபாடுகள் மிகவும் குறைந்த அதே குழு அல்லது குலம் சார்ந்த மணப்பெண்/மணமகன் தேர்வு செய்தலே சுமுகமான முறையில் வாழ்க்கை முறையை தொடரச்செய்வதாக இருக்கும். முரண்பட்ட வாழ்க்கை முறையை உடைய இருவர் இணைதல் பின்னாட்களில் பிரச்சினைகளை உருவாக்கும்.. ஜாதி மறுப்புத் திருமணம் சமூகத்தில் இயல்பாக படிப்படியாக மட்டுமே வழக்கத்தில் வர வேண்டும்.. பெரியார் கும்பல் போல தடாலடியாக செய்தால் கலவரம் கைகலப்பில் தான் முடியும்.. சாதி மறுப்பு திருமணத்தை முன்னிறுத்தி கூவுபவன் ஏன் அவனது சொந்த குடும்பத்தில் சாதி பார்த்து திருமணம் செய்கிறான்?


Svs Yaadum oore
ஜூன் 16, 2024 13:35

இதனால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி குடும்பம் பரிதாபம் ... ஆனால் அதே குடும்பத்தை சேர்ந்தவர்களே திராவிட கழகத்திற்குத் தான் வோட்டு போட்டிருப்பார்கள் ….கழகம் என்பதே மக்களை சுரண்டி சம்பாதிக்க வந்த திருட்டு கும்பல் என்று மக்களுக்கு புரியாது ….அதற்கு முகமூடி தான் சமூக நீதி என்று பேசுவது ….


சசிக்குமார் திருப்பூர்
ஜூன் 16, 2024 11:37

கலப்பு திருமணம் ஏற்றுக்கொள்ள இந்து திருமண சட்டத்தில் மட்டுமே முடியும்.


Svs Yaadum oore
ஜூன் 16, 2024 11:37

ஜாதி மறுப்பு திருமணம் என்று பெரிய உளவியல் அறிவியல் பேசறவன் பொது தொகுதியில் தாழ்த்தப்பட்டவரை நிற்க வைத்து ஜெயிக்க வைக்கட்டுமே ...அதை கம்யூனிஸ்ட் விடியல் செய்வானுங்களா? ...அடுத்தவன் குடும்பத்தை பாழாக்கி நாசமாக்குவது …அவனவன் ஜாதியில் பெண் கிடைக்காதா?? இந்த கட்சிகளுக்கு வோட்டு போடும் மக்களை சொல்லணும் ….


சந்திரசேகர்
ஜூன் 16, 2024 11:24

சாதி வாரியாக இட ஒதுக்கீடு நிறுத்த படும் போது ஒருவேளை கலப்பு திருமணம் நடக்கலாம். அரசாங்கம் சாதி சான்றிதழ் கேட்பதை நிறுத்தினால் நடக்கலாம். சாதி அரசியல் நடக்காமல் இருந்தால் கலப்பு திருமணம் நடக்கலாம். பெற்றவர்களுக்கு தன் பிள்ளைகளை யாருக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பது தெரியும்.


Rajarajan
ஜூன் 16, 2024 11:20

முதலில் இந்த புரட்சியை பற்றி மேடையில் பேசுவோர், அரசியல்வாதிகள், இதை ஆதரிப்போர் மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவில் பெண் எடுத்து, பெண் கொடுத்துவிட்டு, நூறு சதவிகிதத்தை எட்டிய பிறகு, முன்னேறிய பிரிவினருக்கு அறிவுரை கூற வேண்டும். அப்போதும் தனிப்பட்ட விருப்பம் மற்றும் ஒழுங்கு முதலில் காணப்படவேண்டும் என்பதும் தவிர்க்க முடியாதது.


கோவிந்தராஜ்
ஜூன் 16, 2024 11:07

ஏற்பதும் ஏற்காததும் தனிபட்ட விருப்பம்


TIRUPUR MAYILVAGANAN SIVAKUMAR
ஜூன் 16, 2024 11:05

கம்யூனிஸ்ட் கட்சி எப்போது இருந்து திருமண ஏர்பாட்டாளர் ஆக மாறியது? இந்த கட்சிகாரின் மகனோ இல்லை மகளோ இந்த மாதிரி வேற்று ஜாதி இல்லை மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் இவர்கள் ஒத்துகொள்வார்களா?


Svs Yaadum oore
ஜூன் 16, 2024 11:01

கலப்பு திருமணம் ஏற்கும் அளவில் தமிழ்நாடு இல்லை …அது தேவையும் இல்லை …ராமசாமி மண் இது ....ஜாதி வன்முறை வேண்டாம் ….இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் திராவிட கட்சிகளின் ஜாதி அரசியல் .….திருநெல்வேலியில் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடல் ….காரணம் ஜாதி பிரச்சனை …..ஜாதி தகறாரு திருமணம் என்றால் யார் வேண்டுமானாலும் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை அணுகலாமாம் ….இவர்கள் கட்சி நடத்துகிறார்களா அல்லது ஜோடி பொருத்தம் பார்க்கும் வேலை செய்கிறார்களா ??….இதே போல் ஜாதி பிரச்சனை என்றால் விடியல் அலுவலகத்தையும் அணுகலாமா ??….


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி