உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தலில் பா.ஜ.,வுக்கு தோல்வி ஏன்? ஆய்வு செய்ய பொறுப்பாளர்கள் நியமனம்

தேர்தலில் பா.ஜ.,வுக்கு தோல்வி ஏன்? ஆய்வு செய்ய பொறுப்பாளர்கள் நியமனம்

மதுரை : லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து தொகுதி வாரியாக ஆய்வு செய்ய பா.ஜ.,வில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரித்தாலும், வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து தோல்விக்கான காரணங்கள், தேர்தலில் பா.ஜ.,வினரின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மதுரைக்கு மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், விருதுநகருக்கு கரு.நாகராஜன், திருச்சிக்கு ராமசீனிவாசன் உட்பட ஒவ்வொரு தொகுதிக்கும் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இப்பொறுப்பாளர்கள் தொகுதிவாரியாக சென்று ஆய்வு செய்ய உள்ளனர். சட்டசபை, லோக்சபா தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பார்வையாளர்கள், அணிப்பிரிவினர் உட்பட கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி அதனை மாநில தலைமைக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளனர்.இக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும், அதற்கு ஒத்துழைக்கவும் வலியுறுத்தி, மாநில அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம் அனைத்து நிர்வாகிகளுக்கும் ஆடியோ அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் 'லோக்சபா தேர்தலில் எந்தெந்த விஷயத்தில் கவனம் செலுத்தி இருந்தால் நன்றாக இன்னும் இருந்திருக்கும், எந்த இடத்தில் நமக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளது, எத்தனை ஓட்டுச்சாவடிகளில் நமக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்துள்ளது, அங்கு அதிக ஓட்டுகள் கிடைத்ததற்கு என்ன காரணம், எந்த மண்டல்களில் குறைந்த ஓட்டுகள் கிடைத்தன, அதற்கான காரணம் என்ன, நமக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தவர்கள் யார், யார், வருங்காலத்தில் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறிக்கையாக தயாரித்து ஜூன் 30க்குள் மாநில தலைமைக்கு அனுப்ப வேண்டும். அதன்பின் ஜூலை 6 ல் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

venugopal s
ஜூன் 26, 2024 19:21

வருடம் முழுவதும் தமிழ்நாடு, தமிழக மக்கள், தமிழ் மொழிக்கு எதிராக எல்லா துரோக வேலைகளையும் செய்து விட்டு அப்புறம் தமிழக மக்கள் ஏன் பாஜகவுக்கு ஓட்டு போடவில்லை என்று ஆராய்ச்சி செய்வது தேவையா? இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே!


சின்னத்தம்பி
ஜூன் 26, 2024 12:44

ராமர்தான் காரணமாம்.


அப்புசாமி
ஜூன் 26, 2024 12:44

பதவி ஆசை போகலை.


ராமகிருஷ்ணன்
ஜூன் 26, 2024 11:47

ஏன் தோற்றோம் என்பதை விட இண்டி கூட்டணி எதனால ஜெயித்தது என்று யோசிக்க வேண்டும். எல்லாம் டகாடக் டகாடக் என்று பணம் வந்துரும் என்று நம்பி ஏமாந்து விட்டனர். நிச்சயம் காங்கிரஸ் ஜெயிக்காது என்று தெளிவாக தெரிந்து இந்த வாக்குறுதிகளை பத்திரம் அடித்து கொடுத்தனர்.


Sakthi Vel
ஜூன் 26, 2024 11:03

ராமலிங்கம் தோற்றவர் தானே


Ms Mahadevan Mahadevan
ஜூன் 26, 2024 10:50

பிஜேபி தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. அயோத்தியில் உறவினர்களாக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்து இன்று வரை அந்த வேற்றுமையை வளர்த்து வருகிறது.தேர்தல்பிரசாரதில் கூட இடத்துக்கு தக்கவாறு பேசியது மறக்க வேண்டாம்


Neutrallite
ஜூன் 26, 2024 11:08

காங்கிரஸும் திமுகவும் தான் மற்ற மதத்தினரை அச்சுறுத்தி, இல்லாத பொய் பிரச்சாரங்களை செய்யும் பிரிவினைவாதத்தை ஆணி வேர்கள்.


Svs Yaadum oore
ஜூன் 26, 2024 10:08

நேற்று ஒருத்தர் ஜெய் பாலஸ்தீன் என்று பதவி ஏற்பு ....இத்தாலி வடக்கன் பாலஸ்தீன் லட்ச தீவு என்றால் அப்ப மட்டும் ஓங்கோல் திராவிடனுக்கு மத சார்பின்மையாக இனிக்குதே ...அது எப்படி ....


Svs Yaadum oore
ஜூன் 26, 2024 10:06

வடக்கன் உத்தரபிரதேசம் இத்தாலி என்றால் அப்ப மட்டும் திராவிடனுக்கு இனிக்குதே அது எப்படி ??...


Muguntharajan
ஜூன் 26, 2024 10:01

இதுல ஆராய்ச்சி பண்ண என்ன இருக்கிறது? எல்லா மதத்தினரையும் சமமாக கருதி பிரச்சாரம் செய்ய வேண்டும். வெறும் இந்து மதத்தினர் ஓட்டு வந்தால் போதும் என்று நினைக்கக் கூடாது. இஸ்லாம் கிறிஸ்தவம் மதத்தினர் ஆதரவை வாங்கினால் தான் வெற்றி கிடைக்கும். இந்துக்களை மட்டும் நம்பி இருக்க கூடாது. ஏனென்றால் பல இந்துக்கள் மத சார்பற்றவர்கள் மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்கள்.


Velan Iyengaar
ஜூன் 26, 2024 09:36

பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி சொன்னது தான் .....


Velan Iyengaar
ஜூன் 26, 2024 11:17

எந்தக்காலத்திலும் bj கட்சி தமிழக மக்களின் ஆதரவை பெறவே பெறாது அந்த கட்சி டிசைன் அப்படி... எந்நேரமும் ஆடியோ வீடியோ அரசியல் செய்துகொண்டிருக்கும்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி