உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாங்குநேரி, ஓசூரில் நாங்கள் போட்ட திட்டத்திற்கு மூடுவிழா செய்தது ஏன்? மாஜி அமைச்சர் கேள்வி

நாங்குநேரி, ஓசூரில் நாங்கள் போட்ட திட்டத்திற்கு மூடுவிழா செய்தது ஏன்? மாஜி அமைச்சர் கேள்வி

சென்னை: 'அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத் விடுத்துள்ள அறிக்கை:ஜவுளி நிறுவனங்களின் முதலீடுகள், அண்டை மாநிலங்களுக்கு சென்றது குறித்து அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.அதற்கு நேரடியாக பதில் அளிக்காமல், தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா நான்கு பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். பழனிசாமி முதல்வராக இருந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2020ம் ஆண்டு டிச., 14ம் தேதி, 'ஓலா' நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி ரூ.2,354 கோடி முதலீட்டில், மின்சார இருசக்கர வாகன தொழிற்சாலையை ஓலா நிறுவனம் அமைத்து வருகிறது.கடந்த 2020ம் ஆண்டு கொரோனா சமயத்தில், சீனாவில் செமி கண்டக்டர் உற்பத்தி பாதிக்கப்பட்டது.அப்போது, இந்தியாவின் செமி கண்டக்டர் தேவையை பூர்த்தி செய்ய, அ.தி.மு.க., அரசு நாங்குநேரி மற்றும் ஓசூரில், செமி கண்டக்டர் பூங்காக்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டோம். அதன்பின், ஆட்சிக்கு வந்த தி.மு.க., மூடுவிழா நடத்தியது.தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஜவுளித் தொழில் நசிவடைவதற்கு, தி.மு.க., அரசின் தொழிற்கொள்கை, கடும் மின் கட்டண உயர்வு, தொழில் வரி, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு தான் காரணம் என பழனிசாமி பட்டியலிட்டிருந்தார். அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை