உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இட ஒதுக்கீடு பற்றி இ.பி.எஸ்., பேசாதது ஏன்?: அன்புமணி

இட ஒதுக்கீடு பற்றி இ.பி.எஸ்., பேசாதது ஏன்?: அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இடஒதுக்கீடு பற்றி இ.பி.எஸ்., பேசாதது ஏன், என பா.ம.க., அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறியதாவது: ‛கருணாநிதிக்கு சமூக நீதியைப் பற்றி தெரியும். அவர் இருந்திருந்தால் இன்று, 10.5 சதவீத இடஒதுக்கீடு வந்திருக்கும். ஸ்டாலினை சுற்றி நாலு அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் வியாபாரிகளாக உள்ளனர். அவர்கள் சொல்வதைத் தான் ஸ்டாலின் கேட்கிறார். அவர்களுக்கு சமூகநீதியைப் பற்றி என்ன தெரியும்? 2021 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., உடன் கூட்டணி இல்லை என்றதும், தேர்தல் தேதி அறிவிக்கின்ற சில மணிநேரங்களில் அதாவது 12 மணியளவில் ஜி.கே.மணியிடம் இ.பி.எஸ்., ஒரு பட்டியல் கொடுத்தார்.கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாவிட்டால் சட்டம் கொண்டு வர மாட்டோம் என்றார். அதற்கு மருத்துவர் ராமதாஸ், 'வெற்று பேப்பரில் கையெழுத்து போடுகிறேன். எங்களுக்கு சீட் வேண்டாம். இடஒதுக்கீடு போதும்' என்றார். உள் ஒதுக்கீட்டை ஐகோர்ட் ரத்து செய்த பிறகு, இதுவரைக்கும் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என இ.பி.எஸ்., பேசவில்லை.' இவ்வாறு அன்புமணி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நடராஜன்
ஏப் 06, 2024 14:52

இட ஒதுக்கீடு இப்ப 90% ஆகிவிட்டது. இன்னும் என்ன பாக்கி இருக்கு. 100% வேணுமா...


தமிழ்
ஏப் 06, 2024 11:52

நீங்களும் தேர்தல் வந்தால் மட்டுமே இட ஒதுக்கீடு பற்றி பேசுவதன் மர்மம் என்னவோ.


Oviya Vijay
ஏப் 06, 2024 07:53

பெட்டி அதிகமா கெடச்சு அதிமுகவோட கூட்டணி சேர்ந்து இருந்தா இந்த கேள்வியெல்லாம் இந்த சின்ன மாம்பழம்கிட்ட இருந்து வந்திருக்காது...


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை