உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணியும் வெச்சுட்டு மதுவுக்கு எதிரா போராட்டமும் நடத்தலாமா; திருமாவுக்கு சீமான் கேள்வி

கூட்டணியும் வெச்சுட்டு மதுவுக்கு எதிரா போராட்டமும் நடத்தலாமா; திருமாவுக்கு சீமான் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பரமக்குடி: மதுவுக்கு எதிரான வி.சி.க., போராட்டத்தில் பங்கேற்க அ.திமு.க.,வுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது குறித்து நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். தியாகி இமானுவேல் சேகரனின் 67ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- பட்டியலினத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை வெளியேற்றி, அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை, அப்படியே கொடுக்க வேண்டும். அதுவே தமிழ் தேசியத்தின் விடுதலை. நீங்கள் செய்யவில்லை எனில், ஒருநாள் அதிகாரத்திற்கு வரும் போது, அதை நாங்கள் செய்வோம். வேளாளர் என்பதே எங்களின் குடிப்பெயர். எந்தத் தமிழ் சாதியில் பாண்டியன் எனும் பெயர் இல்லை என்பதை சொல்லுங்கள். இந்தியா ஒரு தேசமே இல்ல. மாநிலங்கள் மொழி வழியில் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் இருந்த கல்விக்கொள்கையை நீ வகுத்து கொடுத்தியா? உன் புதிய கல்விக்கொள்கையில் ஒரு சிறப்பை சொல்லுங்க பார்ப்போம். புதிய கல்விக் கொள்கை குழந்தைகளுக்கு எழுதி வைக்கும் மரண சாசனம் என்று கல்வியயல் அறிஞர்கள் சொல்கிறார்கள். கல்வி எல்லாருக்கும் சமமாக இருக்கிறதா? தாய் மொழி கல்வி என்பார்கள். அப்பறம் எதுக்கு சமஸ்கிருதம் உள்ளே வருகிறது. திருச்சி ஏர்போர்ட்டில் எதுக்கு சமஸ்கிருதத்தில் கல்வெட்டு. இதுதான் மொழி திணிப்பு. புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம், ஹிந்தி இருக்கா, இல்லையா?மது ஒழிப்புக்கு எதிராக இருந்தவர் ராமதாஸ். டாஸ்மாக்கை மூடுபவர்களுடன் கூட்டணி என்று சொல்லியிருப்பதை பார்த்திருப்பீர்கள். அப்புறம் என்ன ஆனது? திருமாவளவன், அ.தி.மு.க.,வுடன் இணைந்து மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்துவார், பின்னர் மீண்டும் டாஸ்மாக்கை திறக்கத் தானே செய்வார்கள். தி.மு.க.,வுடன் இருந்து கொண்டு திருமாவளவன் டாஸ்மாக்கை எதிர்த்து போராட்டம் நடத்தலாமா? விற்பனை குறைவானதற்கு டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த அரசு தான் தி.மு.க., அரசு. ஒரு 5 ஆண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாய்ப்பு கொடுத்தால், தமிழக மீனவனை இலங்கை கடற்படை தொட்டு விடுவானா? என்று பார்த்துக்கலாம். அப்படி தொட்டால், அன்னைக்கே பதவி விலகிடுவேன், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

mohan kc
செப் 13, 2024 07:35

சீமான் முதலில் தமிழனா


mohan kc
செப் 13, 2024 07:26

பல பெண்களை சீரழித்த சீமான்


Jaganraja Appadurai
செப் 12, 2024 08:50

அது மகளிர் மாநாடு.... 5 லட்சம் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


ADVOCATE DALIT PRAVINA G MBBS BL
செப் 12, 2024 06:22

சிங்கள படை தமிழர்களை தொடுவார்களா ? தமிழ் மீனவர்களைத் தொடுவார்களா ? என்பது எல்லாம் உண்மையான தமிழ்ப் படைகள் பார்த்துக் கொள்ளும் புலிகள் படையில் சீ ...மான் க்கு வேலையா ? தமிழ் என்ற ஒற்றை சொல்லை சொல்ல அருகதை அற்றவன் .... சீமான் நீ தமிழ்நாட்டு அரசியல் பேசுவதா ?


rama adhavan
செப் 12, 2024 00:39

இதற்கு பெயர்தான் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன், இரட்டை வேடம் என்பது.


Balamurugan
செப் 11, 2024 23:29

சீமான் ஒரு கிறுக்கு பய திருமா ஒரு ....


kulandai kannan
செப் 11, 2024 23:22

தங்கள் கட்சியினர் சரக்கு அடிப்பதை நிறுத்த எந்த கட்சியாலாவது முடியுமா? சீமான், திருமா உள்பட . வி.சி.க மாநாடு அன்று அந்த ஏரியாவில் டாஸ்மாக் விற்பனை உச்சம் தொடுவது உறுதி.


BALA GURUSAMY H
செப் 11, 2024 22:55

கூட்டணி வேறு தோழமை சுட்டுதல் வேறு??


rama adhavan
செப் 12, 2024 00:37

மண்டை காய்கிறது. டமாஸ் வேண்டாம்.


koderumanogaran
செப் 11, 2024 22:40

எல்லாம் வியாபார தந்திரம்.... கார்ப்பரேட் தி.மு.க எல்லா சிறிய கம்பெனி களையும் விலைக்கு வாங்கி விடும்.


Indhiyan
செப் 11, 2024 22:31

ஓ சைமேனே தாய் மொழி கல்வி என்பார்கள். அப்பறம் எதுக்கு சமஸ்கிருதம் உள்ளே வருகிறது - அப்போ இங்கிலீஸ் உள்ளே வந்துள்ளதே அது பரவாயில்லையா? பள்ளியில் சமஸ்கிருத வழி கல்வியா அல்லது ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படுகிறதா? ஓ, காசுக்காக இங்கிலீஸ் வேணும், இல்லையா? எங்கோ போச்சு அப்போ தாய்மொழி பற்று?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை