உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்துக்கள் தாக்கப்படுவதை நம் நாட்டவர் வேடிக்கை பார்ப்பதா? இண்டி கூட்டணிக்கு எதிராக பலரும் போர்க்கொடி

ஹிந்துக்கள் தாக்கப்படுவதை நம் நாட்டவர் வேடிக்கை பார்ப்பதா? இண்டி கூட்டணிக்கு எதிராக பலரும் போர்க்கொடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'வங்கதேசத்தில் ஹிந்துக்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது உள்நாட்டு பிரச்னை என்று கருதக்கூடாது. வேடிக்கை பார்த்தால் நாம் மஹாபாரதமாக இருக்க முடியாது' என, ஹிந்து அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. ஹிந்துக்கள் மீதான தாக்குதலை, 'இண்டி' கூட்டணி வேடிக்கை பார்ப்பதாகவும், பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு: ஹிந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், வங்கதேசத்தின் வெறும் உள்நாட்டு பிரச்னை அல்ல. நம் அண்டை நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்காக, நாம் உறுதியாக நின்று, விரைந்து செயல்படாவிட்டால் பாரதம், மஹாபாரதமாக இருக்க முடியாது. இந்த நாட்டின் அங்கமாக இருந்த அந்நாடு, துரதிர்ஷ்டவசமாக அண்டை நாடாகி விட்டது. ஆனால், நிஜத்தில் இந்த நாகரிகத்தைச் சேர்ந்த இம்மக்களை, இத்தகைய அதிர்ச்சியான கொடுமைகளில் இருந்து பாதுகாப்பது நம் பொறுப்பு. மதத் தீவிரவாதம் நம் அன்பான பாரதத்தை, ஒருபோதும் ஆட்டிப் படைக்காது என்பதை நாம் உறுதி செய்வோம்.பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்: வங்கதேசத்தில் வசிக்கும் ஒரு கோஷ்டியினர் அங்கு வசிக்கும், ஒரு கோடிக்கும் அதிகமான ஹிந்துக்களை குறிவைத்து, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹிந்து கோவில்கள், ஹிந்துக்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. பல்வேறு கோவில்கள் எரிக்கப்படுகின்றன. 'இஸ்கான்' கோவில் தாக்கப்பட்டு, அங்குள்ள பகவத் கீதை உள்ளிட்ட புனித நுால்கள் எரிக்கப்பட்ட காட்சி கண்ணீரை வரவழைக்கிறது. பாலஸ்தீனத்தில் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றதும், இந்தியாவில் உள்ள தி.மு.க., - காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சிகள் கண்டன குரல் எழுப்பின. ஆனால், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவது குறித்தும், வழிபாட்டு தலங்கள் எரிக்கப்படுவது குறித்தும், அக்கட்சிகள் மவுனம் சாதிக்கின்றன. இதுதான் இண்டி கூட்டணியின் மதசார்பின்மை.புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி: வங்கதேசத்தில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றி உள்ளது. முக்கிய சில நாடுகளின் கைங்கரியம் இல்லாமல், இந்த சம்பவம் நடைபெறாது. கடந்த 50 ஆண்டு காலமாக, இந்தியாவின் கிழக்கு பகுதியில், எல்லை பிரச்னை அல்லது நதி நீர் பிரச்னை என்றால், பேசி தீர்க்கும் சூழல் இருந்தது. அதை முற்றிலும் மாற்றும் நோக்கத்தோடு, ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளது. இதில், இந்தியா நிச்சயம் கவனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.இருப்பினும், மேற்கில் அதிகமாகவும், வடக்கில் ஓரளவு போர் மேகம் சூழ்ந்திருந்த இந்திய எல்லையில், தற்போது கிழக்கு பகுதியிலும் போர் மேகங்கள் உருவாகும் அசாதாரண சூழல் காணப்படுகிறது. இது, எல்லையோர பிரச்னை மட்டும் அல்ல; வேறு கோணங்களிலும் இந்திய மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. நம் அரசியல்வாதிகளும், குறுகிய கண்ணோட்டங்களை ஒதுக்கிவைத்து விட்டு, நம்மை காட்டிலும், தேசம் தான் பெரிது என்ற உணர்வோடு ஒருங்கிணைந்து நிற்க வேண்டும். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்: இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து, ஹிந்துக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்து, இந்திரா வெற்றி பெற்று, பாகிஸ்தானிடம் இருந்து வாங்கி தந்த வங்கதேசத்தில், இன்று ஹிந்துக்கள் கொல்லப்படுகின்றனர். எங்கெல்லாம் ஹிந்துக்கள் சிறுபான்மையினராகி வருகின்றனரோ, அங்கெல்லாம் ஹிந்துக்களை கொன்று குவிக்கின்றனர்.இந்தியாவையும் பிரிக்கத்தான், 'இண்டி' கூட்டணி அமைந்துள்ளது. இதை இந்தியாவில் இருக்கும் ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக நடுநிலை ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல், இந்தியாவில் ஹிந்துக்கள் அனாதையாக நிற்கும் காலம் வந்து விடும்.இவ்வாறு பலரும் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Stephen Jayaraj
ஆக 13, 2024 16:54

பங்களாதேஷ் க்கு, இந்திய இராணுவத்தை அனுப்பி இந்துக்களை காக்க தவறிய ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்


venugopal s
ஆக 08, 2024 15:59

இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது அதில் இந்தியா தலையிடக்கூடாது,அது அவர்கள் உள்நாட்டுப் பிரச்சினை என்ற பாஜகவினர் இப்போது பங்களாதேஷ் ஹிந்துக்கள் தாக்கப்படும் போது மட்டும் இது அண்டை நாட்டு உள்நாட்டு பிரச்சினை என்று ஒத்துக் கொள்ள மறுப்பது ஏன்? ஏன் இந்த இரட்டை வேடம்?


நிக்கோல்தாம்சன்
ஆக 10, 2024 06:22

மழை விட்டும் தூவானம் என்று இந்த மக்கள் கடற்கரையில் ஏர்கூலர் வைத்து சொன்னாங்களே அந்த பாஜகவினரை சொல்றீங்களா ?


Aswath Narayanan
ஆக 11, 2024 09:09

விடுதலை புலிகளுக்கு ராணுவம் இருந்தது, வங்காள தேசம் உருவாக்க இந்திய ராணுவம் பேரும் தியாகம் செய்தது, அந்த உரிமை நமக்கு வங்காள தேசத்திடம் உள்ளது


Ramesh Sargam
ஆக 08, 2024 12:56

மிகவும் கேடுகெட்டவர்கள் இந்த இண்டி கூட்டணியினர். அங்கு பாதிப்புக்கு உள்ளாகிய இஸ்லாமியர்களுக்கு கண்ணீர் விடுகிறார்கள். ஆனால் அங்கு பாதிப்புக்கு உள்ளாகிய நம் இந்தியர்களுக்கு ஒரு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை இந்த கேடுகெட்ட இண்டி கூட்டணியினர்.


Stephen Jayaraj
ஆக 13, 2024 16:57

ஆம், இதையும் நாம் கண்டிப்பும், பங்களாதேஷ் க்கு நமது இந்திய இராணுவத்தை அனுப்பி இந்துக்களை காக்க தவறிய ஒன்றிய அரசை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும்


Balaji
ஆக 08, 2024 12:52

தினமலர் மட்டும் தான், இந்த செய்தியை கொடுத்துள்ளது. மற்றவர்கள் யாரும் கவலைப்பட வில்லை


Baski
ஆக 08, 2024 08:54

இந்துக்கள் இண்டியாவில் தாக்கப்பட்டாலே வேடிக்கை பார்ப்பவர்கள் அவர்கள். வங்கதேசத்தில் நடந்தால் அவர்கள் என்ன கருத்து சொல்ல போகிறார்கள்?


V RAMASWAMY
ஆக 08, 2024 08:26

இவர்கள் ஹிந்து விரோத கட்சிகள் என்பது உறுதியாகிறது. பின் ஏன் அவர்கள் பின்னாடி இந்துக்களும் சுற்றுகிறார்கள், வாக்களிக்கிறார்கள்? அவமானமாகவும் வெட்கமாகவும் இல்லை ?


Svs Yaadum oore
ஆக 08, 2024 07:43

பங்களாதேஷ் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்டது பெரும்பாலும் தலித்துகள் தான்.. அங்குள்ள ஹிந்துக்கள் ஐம்பது சதம் மேற்பட்டோர் தலித்துகள். ஆனால் சமூக நீதி மத சார்பின்மையாக திராவிட கூட்டணி தலித் கட்சியினரும் மௌனம் ....


Svs Yaadum oore
ஆக 08, 2024 07:40

துருக்கி குத்து சண்டை வீரருக்கு விடியல் திராவிட கனியக்கா மத சார்பின்மையாக ஆதரவு தெரிவிப்பார்கள் ....திராவிட அக்கா லட்ச தீவு மாலத்தீவு காசா பிரச்சனை சிரியா பிரச்சனை மணிப்பூர் என்றால் மவுண்ட் ரோட்டில் சமூக நீதிக்கு ஆதரவாக மெழுகுவத்தி ஊர்வலம் நடத்துவார்கள் .....ஆனால் பங்களாதேஷ் ஹிந்துக்கள் பிரச்சனை என்றால் மத சார்பின்மையாக மௌனம் ...


RAMAKRISHNAN NATESAN
ஆக 08, 2024 07:33

மற்ற மதத்தினர் அவரவர் மதம்சார்ந்து வாழும்போது இந்துக்கள் மட்டும் மதசார்பற்ற நடுநிலை கோமாளிகளாக வாழ்வது ஏன்?


நிக்கோல்தாம்சன்
ஆக 10, 2024 06:24

அதனைத்தான் நாத்திகம் என்று இங்குள்ளவர்கள் கூறு போட்டுகொண்டுள்ளார்கள்


நிக்கோல்தாம்சன்
ஆக 08, 2024 07:31

டெங்கு மலேரியா என்று பேசிய வாரிசு இப்போ தீவிரவாதிகளை வரவேற்பான் ஏனென்றால் அவர்களது வோட்டு அவனுக்கு வேண்டும், ஆனால் உண்மையில் பங்களா முஸ்லிம்கள் இங்கே வந்தால் இங்கிருக்கும் முஸ்லிம்களின் பெண்களே பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதனை உணர ஒரு தலைமுறை வேண்டும் , அப்புறம் தான் தெரியும்...


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி