உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசியலுக்கு முழுக்கு: மோடிக்கு சித்தராமையா சவால்!

அரசியலுக்கு முழுக்கு: மோடிக்கு சித்தராமையா சவால்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மது வணிகர்களிடம் ரூ.700 கோடி வசூல் செய்ததாக கூறிய குற்றச்சாட்டை, பிரதமர் மோடி நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்' என கர்நாடகா முதல்வர் சித்தராமையா சவால் விடுத்தார்.மஹாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசும் போது, 'மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் செலவுக்காக கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மது வணிகர்களிடம் ரூ.700 கோடி வசூலித்து செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j5mkdoqq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு பதில் அளித்து, சித்தராமையா கூறியதாவது: கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மது வணிகர்களிடம் ரூ.700 கோடி வசூல் செய்ததாக கூறிய குற்றச்சாட்டை பிரதமர் மோடி நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். நிரூபிக்காவிட்டால் அரசியலில் இருந்து நீங்கள் ஓய்வு பெறுவீர்களா? கர்நாடகா சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்ததில் இருந்து அவர் மீண்டு வரவில்லை. எங்கு சென்றாலும் கர்நாடகா மாநிலத்தை பிரதமர் மோடி தவறாக பேசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

துணை முதல்வர் பதிலடி

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார், ' ரூ.700 கோடி வசூலித்து செய்துள்ளதாக, குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் எந்த தண்டனையும் சந்திப்பேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Anonymous
நவ 12, 2024 10:41

சார், கெளம்புங்க அப்படியாவது, பாவம், டிகே சிவகுமார் ரொம்ப நாளாக அதுக்குதான் waiting


vadivelu
நவ 12, 2024 07:06

ஆமாம் , .... சொல்வது தவறு.. 699 கோடிகள்தான் , 700 என்பது பொய்.


அப்பாவி
நவ 12, 2024 06:50

நிரூபிச்சால் அரசியலுக்கு முழுக்கு அல்ல. ஜெயில்ல களி.


அப்பாவி
நவ 12, 2024 04:09

நீதிமன்றத்தில் போய் மான நஷ்ட வழக்கு போடுவதுதானே சித்து? நீதிமன்றங்ஜள் வழக்கை விசாரிக்க ரெடியாக்கீது.


Anantharaman Srinivasan
நவ 11, 2024 21:57

தேர்தலுக்கான பேச்சு. ரூபாய் நோட்டு டீமானிடரை சேஷன் போது 30% கமிஷனுக்கு நாடு முழுவதும் பழைய நோட்டுகளை மாற்றிக்கொடுத்ததாக பேச்சு அடிபட்டதே. சேகர் ரெட்டியிடம் கோடிக்கணக்கில் 2000 ரூபாய் நோட்டுகள் எப்படி இருந்தது ? SBI யிடமே அதற்கு உன்டான கணக்கு ஆதாரமோ இல்லையென கைவிரித்ததது நினைவிருக்கா? ?


Ramesh Sargam
நவ 11, 2024 19:49

எல்லா மாநிலங்களிலும், சாயங்காலம் ஆனால் ஒரு போலீஸ் வாகனம் வொவொரு சரக்கு விற்கும் கடைகளுக்கு ஒரு விசிட் அடிக்கும். அங்குள்ளவர்களை அங்கேயே குடிக்காதீர்கள் என்று சொல்ல அல்ல... சரக்கு விற்கும் கடைக்காரர்களிடம் மாமூல் வாங்க. இது தொடர்ந்து எல்லா மாநிலங்களிலும் நடக்கும் ஒரு விஷயம்.


Anantharaman Srinivasan
நவ 11, 2024 21:48

கொலம்பஸ் சின் கண்டுபிடிப்பு.


sankar
நவ 11, 2024 17:24

நூறு சதவீதம் கணபார்மெட் செய்தி - சோ ராஜினமாவை தயார் செய்துவிடு மண்டையா


Venkateswaran Rajaram
நவ 11, 2024 17:12

ஒரு திருடன் ஒரு திருடனிடம்தான் சவால் விடணும் ...இது தப்பு


Narayanan Muthu
நவ 11, 2024 18:29

அவர் சரியாகத்தான் சவால் விட்டிருக்கிறார்


ArGu
நவ 11, 2024 16:44

நிரூபித்தால் முழுக்கு எல்லாம் போட தேவையில்லை அவனே பொடனியில் அடித்து இழுத்து சென்று விடுவான்


visu
நவ 11, 2024 15:48

நீங்க மூடா வழக்குக்கு பதில் சொல்லுங்க போதும் மற்ற ஊழல் வழக்குகள் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்


புதிய வீடியோ