உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திரப்பதிவு டோக்கன் அறிவிப்பு திட்டம் முழு பலனை தருமா?

பத்திரப்பதிவு டோக்கன் அறிவிப்பு திட்டம் முழு பலனை தருமா?

சென்னை:தமிழகத்தில் பத்திரம் பதிய விரும்புவோர், அது தொடர்பான தகவல்களை 'ஆன்லைன்' முறையில் பதிவிட வேண்டும். அதன் அடிப்படையில், முதல்கட்ட சரிபார்ப்பு முடிந்த நிலையில், பத்திரப்பதிவுக்கான நேரம் ஒதுக்கி, 'டோக்கன்' எண் வழங்கப்படும். இந்த வரிசை அடிப்படையில் தான் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும். இதன்படி, தங்களுக்கான நேரத்துக்கு முன்கூட்டியே, பொதுமக்கள் சார் - பதிவாளர் அலுவலகங்களுக்கு வந்து விடுகின்றனர். ஒரே சமயத்தில் பலரும் காத்திருப்பதால், அடுத்தது யாருடைய டோக்கன் எண் வரும் என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக, டோக்கன் வரிசை எண்ணை வெளிப்படையாக அறிவிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும், 52 அங்குல திரை எல்.இ.டி., திரை அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கடந்த மாதம் துவக்கி வைக்கப்பட்டது.ஆனால், இத்திட்டம் முழுமையாக பலனை தராமல் உள்ளதாக கூறப்படுகிறது. டோக்கன் வரிசை எண் விபரங்களை பெரிய திரையில் வெளியிடுவது நல்லது தான். ரயில் நிலையங்களில் உள்ளது போன்று தெளிவாக அறிய முடிகிறது. ஆனால், இதில் காட்சியாக மட்டுமே அறிவிப்பு கிடைக்கிறது. ஒலி வழி அறிவிப்புக்கான வசதி செயல்படவில்லை. ஒலி வழி அறிவிப்பு வசதி செயல்பாட்டுக்கு வந்தால், அனைத்து தரப்பு மக்களும் இதில் பயன் பெறுவர் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ