உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் தி.மு.க., பங்கு கொடுக்குமா? திருமாவளவனுக்கு ஆதரவாக சீமான் கேள்வி

கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் தி.மு.க., பங்கு கொடுக்குமா? திருமாவளவனுக்கு ஆதரவாக சீமான் கேள்வி

மதுரை : ''ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பவன் கல்யாணுக்கு கூட்டணி ஆட்சியில் பங்கு கொடுத்தது போல் தி.மு.க., தனது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்குமா,'' என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.மதுரையில் அவர் கூறியதாவது: கோவை அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார். மிரட்டப்பட்டு உள்ளார். தொழில் நிறுவனத்தின் அதிபருக்கே இந்நிலை என்றால் சாதாரண மக்களின் நிலையை தெரிந்து கொள்ளுங்கள். மன்னிப்பு கேட்ட வீடியோவை வெளியிட்டது தவறு என தெரிந்து பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை, மன்னிப்பு கேட்டதை வரவேற்கிறேன்.ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தைரியத்தை பாராட்டுகிறேன். 2021 சட்டசபை தேர்தலில் இதே முழக்கத்தை வைத்து திருமாவளவன் தேர்தலை சந்தித்து இருக்கலாமே. வரும் தேர்தலில் மது ஒழிப்புக்கு ஆதரவாக உள்ள கட்சிகளுடன் திருமாவளவன் அணி சேர வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என தி.மு.க.,வையும் சேர்த்துதான் திருமாவளவன் சொல்கிறார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, கூட்டணி ஆட்சியில் பவன் கல்யாணுக்கு பங்கு கொடுத்தது போல தி.மு.க., தனது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்குமா.கருணாநிதி குடும்பத்தில் தான் துணை முதல்வர்கள் இருப்பார்களா. இதை எதிர்த்து தான் திருமாவளவன் கேள்வி கேட்கிறார். இனிவரும் காலங்களில் தன் நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்க வேண்டும். புதிதாக கட்சி தொடங்கும் போது அதிகாரத்தில் உள்ளவர்கள் நெருக்கடி தருவது வாடிக்கையாக உள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு புதிது. நான் கட்சி துவங்கிய போது பல இன்னல்களை சந்தித்தேன். விஜய் இன்னும் பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை