உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்சிகளை கடந்து வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும்: நாணய வெளியீட்டு விழாவில் ராஜநாத்சிங் பேச்சு

கட்சிகளை கடந்து வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும்: நாணய வெளியீட்டு விழாவில் ராஜநாத்சிங் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : கட்சிகளை கடந்து வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும் என கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளி்யீட்டு விழா நடைபெற்றது விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார். தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய , மாநில அமைச்சர்கள், தமிழக பா.ஜ, தலைவர் அண்ணாமலை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் வணக்கம் என தமிழில் கூறி உரையை துவக்கிய ராஜ்நாத்சிங் கருணாநிதிக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். நாட்டின் தலைசிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக கருணாநிதி விளங்கினார். மாநிலங்களின் உரிமைக்காக அவர் போராடினார். இந்தியாவின் தேசிய ஆளுமை மாநிலங்களின் எல்லைகளை கடந்து நாட்டின் தலைவராக திகழ்ந்த கருணாநிதி வேற்றுமையில் ஒற்றுமையை பாராட்டியவர். நாட்டின் கலாசாரம் மற்றும சமூக நீதியின் அடையாளமாக திகழ்கிறார். பஞ்சாப் முதல் தமிழ்நாடு வரை நாட்டில் அரசில் மாற்றங்கள் நிகழ்ந்த போது தலைவராக உருவெடுத்தார். 1960 முதல் இப்போது வரை வலுவான மாநில கட்சியாக திமுக இருப்பதற்கு அடித்தளமிட்டவர் கருணாநிதி. தேசிய அளவில் கூட்டணி ஆட்சியை திறம்பட செயல்படுத்தியவர் என்ற பெருமைக்குரியவர் கருணாநிதி. நாட்டின் கூட்டாச்சியை பலப்படுத்தும் தலைவராக திகழ்ந்தார்.பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவை பேணி வந்தவர் கருணாநிதி, மகளிர் சுய உதவிக்குழுவை துவங்கிய பெருமைக்குரியவர் கருணாநிதி. மகளிர் மேம்பாடு, விளிம்பு நிலை மக்கள் தரமான கல்வியை பெற திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. மக்களின் குறைகளை கேட்க மனுநீதி என்ற நல திட்டத்தை கொண்டு வந்தவர். கருணாநிதியின் அரசியல் போராட்டங்கள் தீவிரமானவை, துணிச்சல் மிக்கவை, தமிழ் இலக்கியம் சினிமா துறையிலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திடும் தமிழகத்திற்காக பாடுபட்டவர் கருணாநிதி , கருணாநிதியின் பொது நல தொண்டால் அரசியல் கட்சிகள், கொள்கைகளை கடந்து நாட்டின் வளர்ச்சிக்காக நமதுதிட்டங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிடப்பட்டதால் என்னுடைய உணர்வுகளை சொல்ல முடியாத மகிழ்ச்சியில் உள்ளேன். கருணாநிதி நினைவு நாணயத்தைவெளியிட்ட மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி. இது வரை நாம் கொண்டாடினோம். இன்று இந்தியாவே கருணாநிதி விழாவை கொண்டாடுகிறது. பல அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட முதல் தேர்வாக இருந்தது ராஜ்நாத்சிங் தான். அவரை விழாவிற்கு அனுப்பி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி. அனைத்து கட்சிகளுடன் நட்பு பாராட்டுபவராக ராஜ்நாத்சிங் பொருத்தமானவர் என்பதால் அவரை அழைக்க முடிவு செய்தேன்.தமிழகத்தில் நடப்பது ஒரு கட்சியின் அரசல்ல ஓர் இனத்தின் அரசு இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.வெளியிடப்பட்ட 100 ரூபாய் நாணயத்தில் கருணாநிதி புகைப்படமும் தமிழ் வெல்லும் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.விழாவில் முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு நினைவு பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

தமிழன்
ஆக 18, 2024 23:34

ஒரே ஒரு நாணயத்தை தான் வெளியீட்டு இருக்காங்க.. அதுக்கு இத்தனை ரூபாய் செலவா?


தமிழன்
ஆக 18, 2024 23:33

இந்த நாணயம் தமிழகத்தில் மட்டும் செல்லுமா?


Ganesun Iyer
ஆக 18, 2024 23:31

கருணாநிதியின் அரசியல் போராட்டங்கள் தீவிரமானவை, துணிச்சல் மிக்கவை,..எ.தெ.. ரயில் வராத தண்டவாளத்தில் தலை வெச்சு போராடினதா..


RAMAKRISHAN NATESAN
ஆக 18, 2024 23:26

எப்படி இப்படியெல்லாம் ஆசை பெரியவரே S R பொம்மை கேஸ் க்கு பிறகு மாநில அரசை கலைக்க முடியாது என்கிற நிலை வந்து விட்டது பாவம் உமக்கு தள்ளாத வயதில் பொல்லாத ஆசை


வைகுண்டேஸ்வரன்
ஆக 18, 2024 22:35

ரங் தாத்தா சொல்ற கே கே ஷா கவர்னராம். ஆனா ராஜேநாத் சிங் அமைச்சரோன்னோ என்ன பேத்தல் இது தாத்தா. 2, 3 தலைமுறை முந்தைய ஆசாமிகளின் புலம்பல் செம காமெடி


ஆரூர் ரங்
ஆக 19, 2024 15:41

போய் வான்கோழி கதையைப் படி. உன்னத காவியம். (நாணயத்தின் ஒரு பக்கத்தில் வான்கோழி என்றும் பொறித்திருக்கலாம்)


வைகுண்டேஸ்வரன்
ஆக 18, 2024 22:34

Usual னு அடிச்சா யூசுப்கான் ன்னு வர்றது ஆசிரியர் அண்ணா திருத்திடுங்கோ


வைகுண்டேஸ்வரன்
ஆக 18, 2024 22:33

வழக்கம் போல் பிஜேபி ஆதரவு வாசகர்கள் வெறுப்பு அரசியல் எழுத, அவை பதிவும் ஆயிடுத்து. போங்கோ, போய் தூங்குங்கோ. எப்படியும் திருந்தறதா ஐடியா யாருக்கும் இல்லை. ரங் தாத்தா கே கே ஷா ன்னு ஏதோ சொல்றார். அவர் கவர்னர் ங்கறார். போன தலைமுறை போல. இப்போ பேசின ராஜேநாத் சிங் கவர்னர் இல்லை. ஆனா ரங் தாத்தா என்ன சொல்றார்??? செம காமெடி, அஸ் யூசுப்கான். ???


ஆரூர் ரங்
ஆக 18, 2024 22:11

இப்படித்தான் KK ஷா ன்னு ஒரு கவர்னர் 1976 ஜனவரி 30 வரை கருணாநிதியை ஆஹா ஒஹோ பேஷ் பேஷ் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார். தனது இனிஷியலின் விரிவாக்கம் Kலைஞர் Kருணாநிதி ஷா என்றார். அந்தோ பரிதாபம் அடுத்த நாளே கருணாநிதி அரசை ஊழலை காரணம் காட்டி டிஸ்மிஸ் செய்தார். ஸ்டாலினையும் மிஸ்சால சிறையில் தள்ளினார். உ.பி ஸ்ஸ் உஷார்.


Kasimani Baskaran
ஆக 18, 2024 21:44

தீம்க்காவுக்கு இப்பொழுதைய தேவை நாணயம்.


Ramesh Sargam
ஆக 18, 2024 21:31

மத்திய அரசின் இந்த முடிவு எனக்கு ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை