உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தாண்டு இறுதிக்குள் புதிதாக 1 லட்சம் பேருக்கு புற்றுநோய் : தேசிய சுகாதார திட்ட அதிகாரி தகவல்

இந்தாண்டு இறுதிக்குள் புதிதாக 1 லட்சம் பேருக்கு புற்றுநோய் : தேசிய சுகாதார திட்ட அதிகாரி தகவல்

கோவை : தமிழகத்தில் நடப்பாண்டு இறுதிக்குள், புதிதாக ஒரு லட்சம் பேருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பது, தமிழ்நாடு புற்றுநோய் பதிவு திட்ட புள்ளிவிபரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.

2000 பேருக்கு நோய் அறிகுறி

தமிழ்நாடு புற்றுநோய் பதிவு திட்டத்தின் கீழ், மாநில அளவில் புற்றுநோய் பாதிப்புகள் கண்காணிக்கப்படுகின்றன. 2021 வரை உறுதி செய்யப்பட்ட புற்றுநோய் பாதிப்பு விவரங்களும், 2022 முதல் 2025 வரை எதிர்பார்க்கப்படும் புதிய புற்றுநோய் பாதிப்புகள் குறித்த கணிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.இதன்படி, கோவையில் கடந்த நான்கு மாதங்களில், 3.2 லட்சம் பேருக்கு மூன்று பிரிவுகளின் கீழ் மேற்கொண்ட பரிசோதனைகளில், 2000 பேருக்கு நோய் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதில், 49 பேருக்கு உறுதிசெய்யப்பட்டு, சிகிச்சை துவக்கப்பட்டுள்ளது.தேசிய சுகாதார திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:

1,00,097 பேர்

2012ல் 53,022 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். 2021ல் 76,968 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மாநில அளவில், 2022 முதல் புதிதாக ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரம், தமிழ்நாடு புற்றுநோய் பதிவு திட்டத்தின் கீழ் தொகுக்கப்படுகிறது. தவிர, 2025 இறுதிக்குள் புதிய புற்றுநோய் பாதிப்பு பட்டியலில், 1,00,097 பேர் வரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.உறுதி செய்யப்பட்ட புள்ளிவிபரங்களின் படி, வாய், பெருங்குடல், வயிறு, நுரையீரல், நாக்கு ஆகிய ஐந்து புற்றுநோய்கள், பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய், கருமுட்டை, கார்பஸ்யூட்டெரி புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் அதிகம் காணப்படுகின்றன. பொதுமக்கள் ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்களை, பின்பற்ற வேண்டியது அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Padmasridharan
செப் 05, 2025 14:45

"பொதுமக்கள் ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்களை, பின்பற்ற வேண்டியது அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்" இதை எவ்வாறு என்று அவரே விவரித்து இருக்கலாம் அல்லது தாங்களே குறிப்பிட்டு இருக்கலாம் சாமி.


ஜெகதீசன்
செப் 03, 2025 08:28

வாகன புகை, மற்றும் ரசாயன பொருட்கள் உள்ள உணவால் புற்று நோய் அதிகரிக்கிறது. ஏதோ வருடாந்திர டார்கெட் மாதிரி வருடக் கடைசியில ஒரு லட்சம் என்று நிர்ணயித்த ஸ்டாடிஸ்டிக்ஸ் கொஞ்சம் ஓவராக படுது.


RK
செப் 03, 2025 05:47

தமிழகத்தில் பொதுவாகவே புற்று நோய் அதிகரித்து வருவதால் அதிகாரிகள் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து எல்லா மக்களுக்கும் மருத்துவ சோதனை நடத்த வேண்டும். அடிப்படை காரணங்களை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Iyer
செப் 03, 2025 05:06

1 சூரிய அஸ்தமனத்திற்குள் இரவு உணவை முடித்துக்கொள் 2 தினமும் 1/2 மணி நேரம் சூர்ய வெளிச்சத்தில் இரு 3 தினமும் 1/2 மணி நேரம் வெறும் காலோடு மண் தரையில் நட 4 மாதம் 2 ஏகாதசியில் முழு விரதம் இரு தண்ணீர் குடிக்கலாம் 5 மாமிசம், முட்டை, DAIRY PRODUCTS களை முற்றிலும் தவிர மேற்கண்ட 5 ஆச்சாரங்களால் - புற்று நோய் குணமாகும் - புற்றுநோய் வரவும் வராது


Iyer
செப் 03, 2025 05:06

1 சூரிய அஸ்தமனத்திற்குள் இரவு உணவை முடித்துக்கொள் 2 தினமும் 1/2 மணி நேரம் சூர்ய வெளிச்சத்தில் இரு 3 தினமும் 1/2 மணி நேரம் வெறும் காலோடு மண் தரையில் நட 4 மாதம் 2 ஏகாதசியில் முழு விரதம் இரு தண்ணீர் குடிக்கலாம் 5 மாமிசம், முட்டை, DAIRY PRODUCTS களை முற்றிலும் தவிர மேற்கண்ட 5 ஆச்சாரங்களால் - புற்று நோய் குணமாகும் - புற்றுநோய் வரவும் வராது


Varadarajan Nagarajan
செப் 03, 2025 04:14

மது, புகையிலை பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் துரித உணவுகளை உண்ணுதல் போன்ற எந்தவித பழக்கமும் இல்லாதவர்களுக்குகூட சமீபகாலமாக புற்றுநோய் பாதிப்புகள் உள்ளது. மேற்கூறிய பழக்கங்கள் எதுவும் இல்லாத நானும் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றவன் என்றமுறையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இவற்றிற்கான காரணங்களை கண்டறிவதோடு இந்த நோய் வராமலிருக்க மக்கள் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என கேட்டுக்கொள்கின்றேன்.


முக்கிய வீடியோ