உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 தோல்வி பழனிசாமி எங்களை விமர்சிப்பதா?

10 தோல்வி பழனிசாமி எங்களை விமர்சிப்பதா?

தமிழகத்தில் தொடர்ந்து, 10 தோல்விகளை சந்தித்தவர் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. அவர், தி.மு.க., ஆட்சியை பற்றி குறை கூறி வருகிறார். நாங்கள் வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறோம். யாரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசை பற்றி குறை சொல்லவில்லை. வரும் 2026 சட்சபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெறும். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் சேவைக்காக சாலைக்கு வருவதற்கு முன், அரசின் உரிய அனுமதி பெற வேண்டும். அதற்கு மாறாக, விளம்பரத்திற்காக போக்குவரத்து நெரிசல் நேரத்தில், சாலையில் வாகனத்தை நிறுத்தி, மரங்களுக்கு தண்ணீர் ஊற்றினால், நடவடிக்கை தான் எடுக்கப்படும். கூடவே, உரிய ஆவணமும் இல்லாததால், பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. - செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 31, 2025 06:43

எம்ஜிஆர் இருந்தபோது கருணாநிதிக்கோ ..திமுகவிற்க்கோ ஆட்சிக்கும் வரும் கனவே கூட கண்டதில்லை.. சட்டசபைக்கு போவதே கூட கருணாநிதிக்கு கனவாக இருந்தது. 1980ம் ஆண்டு காங்கிரசுடன் கூட்டணி சேந்து போட்டியிட்டபோதும்.. திமுகவிற்கு தோல்வியை பரிசளித்தார் எம்ஜிஆர்.. 1984 தேர்தலில் போட்டியிடாமல் சால்ஜாப்பு சொன்னார். எம்ஜிஆரின் மறைவிற்கு பிறகு அதிமுக சேவல்.. புறா என்று பிரிந்து கிடந்த போது வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார்.. 1991 வருட தேர்தலில் இரண்டே இடங்களில் திமுக வெற்றி பெற்றது. இது வரலாறு .. வேண்டுமானால் திமுக தோற்கவில்லை முறைகேடாக அதிமுக மக்கள் பலத்தால் வென்றது என்று சொல்லிக்கொள்ளுங்கள் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை