உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 10 கிமீ புறவழிச்சாலை, 4 பெரிய பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்கள்; லிஸ்ட் போட்டார் நிதின் கட்கரி

தமிழகத்தில் 10 கிமீ புறவழிச்சாலை, 4 பெரிய பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்கள்; லிஸ்ட் போட்டார் நிதின் கட்கரி

சென்னை: ராணிப்பேட்டையில் 10 கிமீ புறவழிச்சாலை, 4 பெரிய பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூகவலைதளத்தில் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், ராணிப்பேட்டையில் இருந்து ஆந்திரப் பிரதேச எல்லை வரை 28 கி.மீ., தொலைவில் நெடுஞ்சாலை கட்ட அனுமதி வழங்கி உள்ளோம். இந்த திட்டத்திற்கு ரூ.1,338 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம்.4 வழி பிரதான பாதையில், இருபுறமும் நடைபாதைகள் இருக்கும். வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டையில் 10 கிமீ புறவழிச்சாலை, 4 பெரிய பாலங்கள் மற்றும் 2 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பெங்களூரு, திருப்பதி மற்றும் வேலூர் போன்ற நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்தை மேம்படுத்தும். இது உள்ளூர் தொழில்களை ஊக்குவிக்கும்.ராணிப்பேட்டையில், 2025ம் ஆண்டு நிறைவடையும் நிலையில், இந்தத் திட்டம் கணிசமான பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும். அதே நேரத்தில் 2 வழிச் சாலைகள் உள்ளூர் போக்குவரத்திற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Easwar Kamal
டிச 20, 2024 21:31

இவங்க போட்ட லிஸ்ட் தமிழகத்துக்கு ஒன்னும் இல்லை. எல்லாம் ஆந்திராவுக்கு இவங்க செய்கிற உபகாரம். சும்மா கண்துடைப்புக்கு தமிழ்நாடுன்னு buildup


M.Srinivasan
டிச 20, 2024 20:58

நீண்ட நாள் கோரிக்கையானபுதுச்சேரி வழியாக சென்னையிலிருந்து கடற்கரை சாலையில்ECR இருவழி பாதையாக இரயில் பாதை அமைக்கப்படுமானால் இரு மாநிலங்களும் வளர்ச்சி அடையும்.


Dinesh
டிச 20, 2024 12:48

ஈரோடு மாவட்டம் பாசூர் என்ற ஊரிலும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு - வெப்படை செல்லும் வழியில் ஆனங்கூர் என்ற ஊரிலும் உள்ள இரயில்வே பாலம் அமைத்தால் மிக சிறப்பாக இருக்கும்....பயண நேரம் வெகுவாக குறைந்து சவுகரியமாக இருக்கும்..... இதை தினமலர் செய்தியில் மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டவும்


முக்கிய வீடியோ