உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்; அமைச்சர் மகேஷ் புதிய தகவல்!

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்; அமைச்சர் மகேஷ் புதிய தகவல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.இந் நிலையில் தேர்வு தேதிகள் எப்போது அறிவிக்கப்படும் என்று ஒரு தேதியை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி உள்ளதாவது; முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி வழங்கிய ஆலோசனையின்படி, வரும் திங்கள்கிழமை (14.10.2024) அன்று இந்த கல்வி ஆண்டிற்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளோம்.இவ்வாறு அந்த பதிவில் அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார்.கடந்த முறை 10ம் வகுப்புக்கான எழுத்துத் தேர்வு மார்ச் 26ல் தொடங்கி, ஏப்ரல் 8ம் தேதி நிறைவு பெற்றது. 11ம் வகுப்பு தேர்வு மார்ச் 4ம் தேதி ஆரம்பித்து, மார்ச் 25ம் தேதி முடிந்தது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி வரை நடந்தது. இம்முறையும் அதுபோலவே தேர்வு தேதிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sankaranarayanan
அக் 12, 2024 21:17

முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி வழங்கிய ஆலோசனையின்படி, என்று சொல்லியிருக்கார் ஏன் அமைச்சராக இருக்கும் இவருக்கு சொந்தமாக யோசிக்க, அமல்படுத்த ஒன்றும் தெரியாதா,முடியாதா? எதற்கெடுத்தாலும் துணை முதல்வர் ஆலோசனைப்படி என்று எல்லாருமே கோரசாக கூறவேண்டும் என்று ஆணையா? நல்லாயிருக்கு இந்த துணை முதல்வர் படுத்தும்பாடு


Devan
அக் 12, 2024 19:52

மத்திய அரசு 9, 12 வகுப்புகளில் பொது தேர்வு வைத்து தேர்ந்தெடுங்கள் என்றால் எதிர்ப்பீர்கள். இப்போது மாணவர்கள் உங்களை எதிர்ப்பார்கள்.


D.Ambujavalli
அக் 12, 2024 18:31

ஒரு துறையின் அமைச்சர், கல்வி அதிகாரிகள், ஆலோசகர்களைக் கலந்து முடிவெடுக்கக்கூட சுதந்திரம் அற்றவராக இருப்பது தெரிகிறது ஜால்றா அடைக்கவும் கணக்கு வேண்டாமா ?


ஆரூர் ரங்
அக் 12, 2024 15:39

ஏற்கனவே யாராலோ தயாரித்துக் கொடுக்கப்பட்ட கேள்வி பதில்களை பார்த்துதான் ஊடகத்தினருக்கு பேட்டி கொடுக்கிறார். பாவம். சின்னச் சின்ன ஸ்கூல் பசங்க. அவர்களுக்கும் அதே வசதி பண்ணிக் கொடுங்க. அட்லீஸ்ட் பார்த்து தேர்வுகளை எழுதற வசதியைக் கொடுங்க.


ஆரூர் ரங்
அக் 12, 2024 15:34

எப்படியும் 90 சதவீதத்துக்கு மேல் பாஸ் போடப்போறீங்க.( பெயிலாகி விடும் மீதி பேர் கூட திராவிடர்கள்தான்).இதுக்கு தேர்வு எதுக்கு? தமிழ்நாட்டவர்கள் எத்தனை முன்னேறிய அறிவாளிகள் என்பது உலகத்துக்கே தெரியுமே.


sundarsvpr
அக் 12, 2024 15:27

பொது தேர்வு நடத்துவதற்கு சுயமாய் சிந்தித்து முடிவு எடுக்க இயலாதவரா கல்வி அமைச்சர்.? துணை தலைமை அமைச்சர் சந்தித்து ஆலோசனை பெற்றது என்பது தலைமை அமைச்சருக்கு பின்னைடைவு என்பதில் சந்தேகம் இல்லை. பொய்யாமொழி இளவட்டம். உதய நிதி இளவட்டம்.


Murugesan
அக் 12, 2024 14:59

தமிழக கல்வித்துறை அவுங்க கையில் !


sridhar
அக் 12, 2024 14:30

முன்கூட்டியே கேள்விகளை வெளியிட்டால் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல மதிப்பெண் கிடைக்கும் . தேர்தல் ஹாலில் திடீரென்று கேள்விகள் கொடுப்பதால் நன்றாக படிப்பவர்கள் மட்டுமே நல்ல மார்க் எடுத்து நல்ல மேல்படிப்பு படிக்கிறார்கள். இது தான் சமூக நீதியா , இந்த ஏற்றத்தாழ்வு களையப்பட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை